பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

விசாகப்பட்டினம் துறைமுகப் பொறுப்புக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசுக் கடன்களின் மீதான தண்டவட்டியைத் தள்ளுபடி செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

प्रविष्टि तिथि: 23 MAY 2018 3:45PM by PIB Chennai

விசாகப்பட்டினம் துறைமுகப் பொறுப்புக்கழகத்திற்கு (விபிடி) வழங்கப்பட்டுள்ள அரசுக் கடன்களின் மீதான தண்டவட்டியைக் கீழ்க் காணும் முறையில் தள்ளுபடி செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய  அமைச்சரவைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

  1. 31.03.2017 வரையிலான விபிடி-யின் தண்டவட்டியான ரூ.250.89 கோடியும் தள்ளுபடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட காலம் வரையிலான தண்டவட்டித்தொகையும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
  2. தண்டவட்டியைத் தள்ளுபடி செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட காலம் வரையிலான தண்டவட்டிக்கு அபராதமாக 0.25% தொகையை விபிடி வழங்கவேண்டும்.
  3. தள்ளுபடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட காலம் வரை நிலுவையில் உள்ள வட்டியையும், நிலுவையில் உள்ள கடன்தொகையான ரூ.44.69 கோடியையும், 2018-19ஆம் நிதியாணடில் ஒரே தவணையாக விபிடி செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in  என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

-----


(रिलीज़ आईडी: 1533271) आगंतुक पटल : 93
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English