குடியரசுத் தலைவர் செயலகம்

மொஹாலி இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 7-ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Posted On: 20 MAY 2018 2:24PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த், பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 7-ஆவது பட்டமளிப்பு விழாவில் (மே 20, 2018) கலந்து கொண்டு, பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தி பெருமைப்படுத்தினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத்தலைவர், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் புதிதாக தொடங்கப்பட்டபோதிலும், நாட்டின் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் மிகச்சிறந்த முக்கியத்துவம் வாய்ந்த மையமாகத் திகழ்கிறது என்று கூறினார். அறிவியல் முன்னேற்றம் காணும் நோக்கம் கொண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆர்வத்தை ஊட்டும் வகையில் இந்த நிறுவனம் மிகக் குறுகிய காலத்தில் வட இந்தியாவின் முக்கிய கல்வி நிறுவனமாக மாறியுள்ளது என்று அவர் தெரிவித்தார். அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கான வசதிகளை வழங்குவதிலும், நாட்டின்  மற்றும் பரந்து விரிந்த சமுதாயத்தின் தேவைகளை நிறைவு செய்வதிலும் ஒருங்கிணைந்த நிறுவனமாக இது திகழ்கிறது என்று குடியரசுத்தலைவர் புகழாரம் சூட்டினார்.

இன்று மொஹாலி பொருளாதார ஞானம், தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், உயிரித் தகவல் மற்றும் அவற்றைச் சார்ந்த துறைகளுக்கான மையமாக விளங்குகிறது என்று குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். எனவே, இந்த நிறுவனம் வெறும் கல்வி நிறுவனமாக மட்டும் செயல்படாமல் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் முறையின் ஆதாரமாகவும் இயங்குவதை நாம் காண வேண்டும் என அவர் கூறினார். இந்த முறையில் இந்த நிறுவனம் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் பெற வேண்டும் என குடியரசுத்தலைவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்

                                                -----



(Release ID: 1533037) Visitor Counter : 110


Read this release in: English