வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் அணுசக்தி தொழில்நுட்பத்துறை பற்றிய கண்காட்சிக்கு சென்று பார்த்த குடியரசுத்தலைவர், அத்துறையின் வசதிகளை திறந்து வைத்தார்.
Posted On:
15 MAY 2018 5:50PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந் மும்பையில் இன்று (15.05.2018) ட்ராம்பேயில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் அணுசக்தி தொழில்நுட்பங்கள் துறையின் கண்காட்சி ஒன்றுக்கு சென்று பார்த்தார். அணுசக்தித் துறையின் வசதிகளையும், அவர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், அணுசக்தித் தொழில்நுட்பத்தை மின்சாரம் முதல் விவசாயம் வரையும், மருத்துவம் முதல் கழிவு மேலாண்மை வரையும் என பல்வேறு துறைகளில் பயன்படுத்துவதில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா ஏற்கப்பட்டுள்ளது என்று கூறினார். எனினும், இந்தத் துறையில் மீச்சிறப்பு நிலையை நோக்கிய பயணம் பாபா அணுசக்தி மையத்தில் அறுபது ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. அதற்கு பிறகு அணுசக்தித்துறை பல்வேறு துறைகள் கொண்ட அமைப்பாக வளர்ச்சியடைந்து நாடெங்கும் பல்வேறு வசதிகளை அமைத்துக்கொண்டுள்ளது.
இந்திய அணுசக்தி விஞ்ஞானிகளின் சாதனைகளை பாராட்டிய குடியரசுத்தலைவர் இந்தச் சாதனைகள் குறிப்பிடத்தக்கவை என்றார். இந்த விஞ்ஞானிகள் அணுசக்தி தொழில்நுட்பத்தை சுகாதாரம், உணவு, வேளாண்மை, நீர்ஆதாரங்கள் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல துறைகளில் பயன்படுத்துவதாக அவர் பாராட்டினார். தேச நிர்மாணம் நீண்ட காலம் பிடிக்கும் முடிவில்லா நடைமுறை என்றும், ஆகையால் நாம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று குடியரசுத்தலைவர் கூறினார்ஃ அணுசக்தித்துறை நமது நாட்டின் மேம்பாட்டு நடைமுறையில் முக்கியப் பொறுப்பினை ஏற்றுள்ளது என்றும் திரு ராம்நாத் கோவிந் கூறினார்.
குடியரசுத்தலைவரின் முழு உரைக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்
------
(Release ID: 1532799)
Visitor Counter : 134