வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

நகரங்கள் பொருளாதார வளர்ச்சியின் உந்துவிசை. நகரங்களில் வாழும் மக்களுக்கு போதுமான வீட்டுவசதி செய்து தருவது அவசியம் : குடியரசுத் துணைத்தலைவர்

நகர்ப்புற அடிப்படை வசதியை உயர்த்தி அமைப்பதற்கு நகரமயமாக்கலில் முழுமையான அணுகுமுறையை கடைப்பிடிப்பது தொடங்கியுள்ளது : ஹர்தீப் பூரி

Posted On: 17 MAY 2018 5:18PM by PIB Chennai

நகரங்கள் பொருளாதார வளர்ச்சியின் உந்துவிசை: நகரங்களில் வாழும் அனைத்துத் தரப்பு  மக்களுக்கும் போதுமான வீட்டுவசதி மற்றும் இதர அத்தியாவசிய வசதிகளை செய்து தருவது அவசியம் என்று குடியரசுத் துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு கூறியிருக்கிறார். புதுதில்லியில் இன்று (17.05.2018) நவ்ரோஜி நகரில் உலக வர்த்தக மையத்திற்கும், நேதாஜி நகர் பொதுப்பிரிவு குடியிருப்பு மறுமேம்பாட்டு திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டி அவர் பேசினார். மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு.ஹர்தீப்சிங் பூரி மற்றும் பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அடிக்கல் நாட்டிய பிறகு உரையாற்றிய திரு ஹர்தீப் பூரி “இன்றைய தினம் நம் அனைவருக்கும் மிகவும் பெருமையளிக்கும் தருணம் – பிரதமரின் புதிய இந்தியா என்ற நெடுநோக்கை அடைவதற்கான பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த நெடுநோக்கில் நாட்டின் உள்ளடக்கிய மேம்பாடு மற்றும் நிலைத்த மேம்பாடு பற்றிய கனவு நனவாவதற்கான பயணம் இது. இதில் உலகத்தரம் வாய்ந்த அடிப்படை வசதியை உருவாக்குவதும், ஆற்றல் அதிகம் உள்ள தீர்வுகள், மேம்படுத்தப்பட்ட வர்த்தகம், வியாபார சூழ்நிலை வாய்ப்புகள் இதில் அடங்கியுள்ளன” என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

                                ----



(Release ID: 1532683) Visitor Counter : 74


Read this release in: English