வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தொடங்கிடு இந்தியா குறித்த சுரேஷ் பிரபு உடனான சமூக ஊடக நேர்முக அமர்வு

Posted On: 17 MAY 2018 4:44PM by PIB Chennai

தொடங்கிடு இந்தியா திட்டம் தொடர்பாக தற்போதைய தொழில் முனைவோர் எதிர்கால தொழில் முனைவோர் ஆகியோரது அவசரக் கேள்விகளுக்கு நேற்று (16.05.2018) சமூக ஊடகத்தில் நேர் அமர்வில் மத்திய வர்த்தகத் தொழில்துறை, சிவில் விமானப்  போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு பதில் அளித்தார். தொழில்முனைவோர் அரசிடமிருந்து எத்தகைய ஆதரவுகளை எதிர்பார்க்கலாம் என்பது குறித்தும் அமைச்சர் விளக்கினார். நேற்று மாலை மணி 4.30 முதல் மணி 5 வரை # Ask Prabhu  என்ற இணைப்பை பயன்படுத்தி நடைபெற்ற நேர்முக அமர்வில் பங்கேற்பாளர்கள் தங்களது கேள்விகளை முன் வைத்தனர்.

தொழில்முனைவோருக்கு கிடைக்கும் பயன்கள், அவர்களுக்கென அரசு வழங்கி வரும் ஆதரவுகள் குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளி்த்தார். நாட்டின் தொழில் முனைவோர் வேட்கையை திறந்து விடுவதற்கு அமைச்சர் முக்கியத்துவம் அளித்தார். தொடங்கிடு இந்தியா மைய வலைதளத்தைப் பயன்படுத்தி கூடுதல் ஆதாரங்களையும் கூடுதல் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளுமாறு தொழில்முனைவோரை அவர் கேட்டுக் கொண்டார். தொடக்க நிலை நிறுவனங்களுக்கும் வரிச்சலுகைகள், தொழில் முனைவுத் திறனில் தங்கள் பங்கேற்பு நமது சமுதாயத்தில் கட்டுப்பாடுகள் மற்றும் வர்த்தகம் குறித்த பொதுவான மனப்பான்மை குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பதில் அளிக்கப்பட்ட கேள்விகளை கேட்ட பங்கேற்பாளர்களுக்கு அமைச்சர் கையெழுத்திட்ட பாராட்டுச் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

                                     ----



(Release ID: 1532680) Visitor Counter : 87


Read this release in: English , Urdu , Bengali