குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம்
தூய்மை இந்தியா கோடைக்காலப் பயிற்சிப் பணிக்கு பதிவுசெய்ய கடைசி நாள் அடுத்தமாதம 15ஆம் தேதிவரை நீடிப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAY 2018 6:03PM by PIB Chennai
தூய்மை இந்தியா கோடைக்காலப் பயிற்சிப் பணிக்கு பதிவுசெய்ய கடைசி நாள் அடுத்தமாதம 15ஆம் தேதிவரை நீடிப்பு இந்த பணி பயிற்சி நாட்டின் இளைஞர்களுக்கு தூய்மை இந்தியா இயக்கத்துடன் முறையான தொடர்பை ஏற்படுத்துவதுடன் பணிப் பயன்களை பெறவும் வழி செய்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களும் நேரு யுவகேந்திரா உறுப்பினர்களும் இப்போது வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதிவரை இதற்கான பதிவு செய்துகொள்ளலாம். நாட்டின் இளைஞர்கள் குறிப்பாக கல்லூரிகளில் பயிலுபவர்கள் தேர்வு மற்றும் படிப்பு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தியிருப்பதால் இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நேரு யுவகேந்திரா இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தூய்மை இந்தியா கோடைக்கால பணிப் பயிற்சியில் சேர விரும்பினால், அவர்கள் www.sbsi.mygov.in என்ற வலைதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
=========
(வெளியீட்டு அடையாள எண்: 1532668)
வருகையாளர் எண்ணிக்கை : 222