தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

ஷெட்யூல்டு வகுப்பு / பழங்குடியினருக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம், சென்னை தொழிலாளர் நலன் வேலைவாய்ப்பு அமைச்சகம், வேலைவாய்ப்பு தலைமை இயக்குநர், இந்திய அரசு சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை-4

Posted On: 17 MAY 2018 6:10PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் நலன் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் வேலைவாய்ப்பு தலைமை இயக்குநர் அலுவலகத்தின் சார்பு அலுவலகமான ஷெட்யூல்டு வகுப்பு / பழங்குடியினருக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம் கீழ்கண்ட பயிற்சி திட்டங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது:

1. ஷெட்யூல்டு வகுப்பு, பழங்குடியின மாணவர்களுக்கு இலவச மற்றும் உதவித்தொகையுடன் கூடிய சிறப்புப் பயிற்சித் திட்டம்.

பயிற்சி காலம்: 11 மாதங்கள்

உதவித்தொகை : மாதம் ரூ.1,000

குறைந்தபட்ச கல்வித்தகுதி : 10+2 தேர்ச்சி அல்லது அதற்கு சமமான அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தின் தகுதி.

வயது வரம்பு :  18 முதல் 30 ஆண்டுகள்

பயிற்சிக் கட்டணம் : இலவசம்

 

2. “O” தரத்துக்கான ஓராண்டு கணினிப் பயிற்சி (மென்பொருள்):

 

பயிற்சி காலம்: 12 மாதங்கள்

உதவித்தொகை : மாதம் ரூ.1,000

குறைந்தபட்ச கல்வித்தகுதி : 10+2 தேர்ச்சி அல்லது அதற்கு சமமான அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகம் அல்லது ஐடிஐ ( பத்தாம் வகுப்புக்குப் பிறகு ஓராண்டு)

வயது வரம்பு :  18 முதல் 30 ஆண்டுகள்

பயிற்சிக் கட்டணம் : இலவசம்

 

குறிப்பு :

விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்: 2018 மே 7ஆம் தேதி

விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி நாள் : 2018 ஜூன் 8ஆம் தேதி

 

மேலும் விபரங்களுக்கு :

சார்பு மண்டல வேலைவாய்ப்பு அதிகாரி,

ஷெட்யூல்டு வகுப்பு / பழங்குடியினருக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம்,

மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்,

வேலைவாய்ப்பு தலைமை இயக்குநர்,

இலக்கம் 56. சாந்தோம் நெடுஞ்சாலை,

சென்னை-600 004.

தொலைபேசி : 044-24615112



(Release ID: 1532636) Visitor Counter : 104


Read this release in: English