தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
பத்திரிகை குறிப்பு
Posted On:
17 MAY 2018 5:44PM by PIB Chennai
“தூய்மை இந்தியா” திட்டத்தின் ஒரு பகுதியாக மே 1 முதல் 15 வரை “தூய்மை இந்தியா இருவார விழா” சென்னை, கே. கே. நகர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் கொண்டாடப்பட்டது. மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். சௌம்யா சம்பத் அவர்கள் விழாவினைத் துவக்கி வைத்து அதற்கான உறுதிமொழியை ஏற்கச்செய்தார்கள். தூய்மை இந்தியா திட்டத்தைப் பற்றிய சிறப்பு அம்சங்களைத் தன்னுடைய துவக்க உரையில் கல்லூரி முதல்வர் அவர்கள் தெரிவித்தார்கள். மேலும் இத்திட்டத்தில் அனைவரும் ஆர்வத்துடன் பங்கெடுக்க வேண்டும் என ஊக்கப்படுத்தினார்கள் மேலும் இக்கொண்டாடட்டத்தில் மருத்துவ கண்காணிப்பாளர் Dr. சஞ்சய் மிஸ்ரா, துணை மருத்துவ கண்காணிப்பாளர் Dr. மகேஷ், பண்டக மேலாளர் Dr. L. தனசேகரன் மற்றும் உதவி இயக்குனர்களும் கலந்துக் கொண்டனர்.
கீழ்கண்ட நிகழ்வுகள் “இருவாரவிழா” கொண்டாட்டங்களின் போது நடைபெற்றன.
1. அறிவிப்பு பதாகைகள் வெளியிடுதல்.
2. பல்வேறு கண்காட்சிகள்.
3. விழிப்புணர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆரோக்கிய முகாம்கள்.
4. காப்பீட்டாளர்களுக்கான வினாடி வினா போட்டி.
5. கட்டுரைப் போட்டி, குறும்பட தயாரிப்பு மற்றும் சுவரொட்டி தயாரிப்பு போட்டிகள் கல்லூரி (மாணவ/மாணவியருக்கும் மற்றும் தொழிலாளிகளுக்கும்) நடைபெற்றன.
6. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
7. மரக்கன்று நடுதல் மற்றும் அனைவரும் சேர்ந்து வளாகத்தை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
8. பயனாளிகளுக்கான கல்வி மற்றும் தகவல் தொடர்பு நிகழ்ச்சிகள்.
9. வளாகத்தை வெள்ளையடித்தல் / கழிவுநீர் பாதைகளை செப்பனிடுதல்.
ESI-ன் திட்டத்தின் சம்பத்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்துடன் விழா நிகழ்வுகளில் பங்கெடுத்துக் கொண்டனர்.
விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியானது மே 15 ஆம் தேதியன்று இனிதே கொண்டாடப்பட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டது. இருவார விழாவின் போது நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகள் நினைவுக் கூறப்பட்டன.
இந்தியாவில் ESI திட்டம்:
இ.எஸ்.ஐ கார்ப்பரேஷன் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு மாபெரும் முன்னேற்ற நிறுவனம் ஆகும். பலதரப்பட்ட சமூக பாதுகாப்பு அம்சங்களான மருத்துவ உதவி மற்றும் விபத்து, நோய்வாய்ப்படுதல் மற்றும் மரணம் ஆகிய நேரங்களிலும் தகுந்த உதவி வழங்கும் நிறுவனம்.
10 நபர்கள் அல்லது அதற்கு மேலும் பணிபுரியும் நிறுவனங்களுக்கு இந்த திட்டம் பொருந்தும் / பலனளிக்கும். மாத வருமானம் 21,000/- வரை பெறுபவர்கள் இத்திட்டத்தின் பயன்களைப் பெற முடியும். இந்நாட்டில் 8.73 லட்சம் தொழிற்சாலைகளும் அதன்மூலம் 3.18 கோடி குடும்பங்களும் இத்திட்டத்தின் மூலம் தற்போது பயன்பெறுகின்றன. இன்றைய / தற்போதைய நிலவரப்படி 12.02 கோடிக்கும் சற்று அதிகமான எண்ணிக்கையில் பயனாளிகள் இத்திட்டத்தில் உள்ளனர்.
1952-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் இந்நிறுவனம் 151 மருத்துவமனைகளையும், 1467 மருந்தகங்களையும், 159 இந்திய மருத்துவப் பிரிவுகளையும், 813 கிளை அலுவலகங்களையும், 62 மண்டல மற்றும் துணை மண்டல அலுவலகங்களையும் நிறுவியுள்ளது.
(Release ID: 1532622)
Visitor Counter : 194