வெளியுறவுத்துறை அமைச்சகம்
மூன்றாம் கட்டத்தில் புதிய அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்குதல்
Posted On:
17 MAY 2018 5:39PM by PIB Chennai
- வெளியுறவு அமைச்சகமும் அஞ்சல் துறையும் நாட்டின் தலைமை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் சில அஞ்சல் அலுவலகங்களை அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களாக பயன்படுத்த முடிவு செய்துள்ளன. நாட்டின் குடிமக்களுக்கு பாஸ்போர்ட் மற்றும் தொடர்பான சேவைகளை விரிவாக்குவதையும் நாட்டின் மிகப்பெரும் பகுதிகளில் பாஸ்போர்ட் சேவை வழங்குவதையும் இந்தக் கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டது.
- முதல் இரண்டு கட்டங்களில் 251 அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களை தொடங்க முடிவு செய்யப்பட்டது. 2018 மே 14-ஆம் தேதி நிலவரப்படி இவற்றில் 192 செயல்பட தொடங்கியுள்ளன.
- தமிழ்நாட்டின் கடலூர், கன்னியாகுமரி, பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய எட்டு இடங்களில் இந்த மையங்கள் செயல்படுகின்றன.
- அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சகமும் அஞ்சல்துறையும் மூன்றாவது கட்டமாக 39 அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளன. இவற்றையும் சேர்த்து நாட்டில் செயல்படும் இத்தகைய மையங்களின் எண்ணிக்கை 289ஆக உயர்ந்துள்ளது.
- தமிழ்நாட்டில் மூன்றாம் கட்டத்தில் கல்லிடைக்குறிச்சியில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்படவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளங்களைப் பார்க்கவும்
--
(Release ID: 1532620)
Visitor Counter : 161