குடியரசுத் தலைவர் செயலகம்

தேசிய புவி அறிவியல் விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்

Posted On: 16 MAY 2018 1:15PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந் புதுதில்லியில் இன்று ( 16.05.2018) தேசிய புவி அறிவியல் விருதுகளை வழங்கினார்.

  இதற்கான நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்று என்று கூறினார். நமது உள்நாட்டு மொத்த உற்பத்தி மற்றும் நமது மேம்பாட்டு நடைமுறை வரும் ஆண்டுகளில் விரைவாக வளரும் தருவாயில் உள்ளது.  பொருளாதாரம் விரிவடையும் போது நமது சுரங்கம் மற்றும் தாதுப்பொருட்கள் துறையும் வளர்ச்சியடையும். அதே சமயம் பொருளாதார விரிவாக்கத்தின் உந்து விசையாகவும் அது இருக்கும். நாம் மேலும், பல நகரங்களையும், வீடுகளையும். வர்த்தக மையங்களையும் உருவாக்கி அதிநவீன அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும்போது முக்கிய ஆதாரங்களின் பயன்பாடும் அதிகரிக்கும். நாம் நன்கு அறிந்தபடி, உலகத்தரத்தை ஒப்பிடும்போது தனிநபர் ஆதாரங்கள் மற்றும் பொருட்கள் நுகர்வு வீதம் இந்தியாவில் மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த வகையில் மேலும் வளருவதற்கு நமக்கு இடம் உள்ளது. நிலையான சுற்றுச்சூழலுக்கு நல்லுறவுடன் கூடிய ஆதார உற்பத்தியை நோக்கிய உயர்தர ஆராய்ச்சி முயற்சிகள் அவசியம். சுரங்கத்துறையில், தொழில்நுட்ப புதுமைப்படைப்புக்கான ஆக்கப்பூர்வ முதலீடும் அவசியம் என்று குடியரசுத்தலைவர் கூறினார்.

குடியரசுத் தலைவரின் விரிவான உரைக்கு www.pib.nic.in  என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

------



(Release ID: 1532339) Visitor Counter : 140


Read this release in: English , Hindi , Marathi