விவசாயத்துறை அமைச்சகம்

பிரதமர் விவசாயப் பாசனத்திட்டத்தின் கீழ் நபார்டு வங்கியுடன் குறு பாசன நிதியம் அமைப்பதற்கான முதலீட்டுத் தொகை வழங்க அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 16 MAY 2018 3:32PM by PIB Chennai

பிரதமர் விவசாயப் பாசனத்திட்டத்தின் கீழ் நபார்டு வங்கியுடன் அர்ப்பணிக்கப்பட்ட குறு பாசன நிதியம் அமைக்க தொடக்க மூலதன நிதியாக ரூ.500 கோடி வழங்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று (16.05.2018) ஒப்புதல் அளித்தது.

விவரம்:

  • ஒதுக்கீடான ரூ.2000 கோடி மற்றும் ரூ.3000 கோடி முறையே 2018-19 மற்றும் 2019-20 ஆண்டுகளில் செலவிடப்படும். நபார்டு மாநில அரசுகளுக்கு இந்தக் காலக்கட்டத்தில் கடன்கள் வழங்கும். நபார்டு மூலம் பெறப்பட்ட கடன்களை இரண்டு ஆண்டு கருணைக்காலம் உட்பட 7 ஆண்டுகளில் திரும்பச் செலுத்த வேண்டும்.
  • குறு நீர்ப்பாசன நிதியத்தின் கீழ், கடன் வட்டி வீதம் நபார்டு இந்த நிதியை செலுத்துவதற்கான கட்டணத்தைவிட மூன்று சதவீதம் குறைவாக இருக்கும்.
  • தற்போது நடைபெற்றுவரும் பிரதமர் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் செலவீனம் வழங்கப்படும். இதற்கென தற்போதைய வழிகாட்டு நெறிமுறைகள் திருத்தியமைக்கப்படும்.
  • திட்டத்தினால் ஏற்படும் நிதிச்சுமை வட்டி மாற்றியமைப்பு உட்பட ரூ.750 கோடி.

பலன்கள்:

  • பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சொட்டுக்கும் கூடுதல் பயிர் என்ற பகுதியின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இந்த அர்ப்பணிக்கப்பட்ட குறு பாசன நிதியம் அமையும்.
  • சிறு பாசன வசதிகளுக்கென கூடுதல் முதலீடு காரணமாக இந்த குறு பாசன நிதியம் 10 லட்சம் ஹெக்டேர் பரப்பில் தொகுப்பு அடிப்படையிலான குறு பாசனத்திட்டங்களை கொண்டுவரும்.
  • இந்த நிதியம் மாநிலங்களுக்கு தங்கள் திட்டங்களுக்கு ஆதாரங்களை திரட்ட உதவும். இதில் கூடுதல் மானியமும் சேரும். 14-வது நிதி ஆணையத்தின் எஞ்சியுள்ள காலத்தின்போது ஆண்டு இலக்கான சுமார் 20 லட்சம் ஹெக்டேர் பாசன வசதி அடைவதற்கு திட்டஅமலாக்கம் உதவும். அரசு செயலாளர்கள் குழுவினர் பரிந்துரை செய்தபடி பிரதமர் விவசாய பாசனத் திட்டத்தின் கீழ் ஒரு சொட்டு கூடுதல் பயிர்கள் என்ற பகுதியின்படி இந்த செயல்பாடுகள் நடைபெறும்.

அமலாக்க அணுகுமுறை மற்றும்  இலக்குகள்:

மாநிலங்கள், பொதுத்துறை, தனியார்துறை பங்கேற்பு மாதிரியில் செயல்படுத்தும் திட்டங்கள் உட்பட  அனைத்து புதுமையான ஒருங்கிணைந்த திட்டங்களுக்கும் குறு பாசன நிதியத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.  மேலும் கூடுதல் மானியத்தின் மூலம் குறு பாசன முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கலாம். கூடுதல் நிலப்பரப்புக்கு உதவும் வகையில் பிரதமர் விவசாய பாசனத்திட்டத்தின் நெறிமுறைகளின் கீழ் கிடைக்கும் பயன்களுக்கும் கூடுதலாக இந்த மானியம் வழங்கப்படும். எனினும், இது இந்தத் திட்டத்தில் மாநில அரசுகளின் பங்குக்கு பதிலாக பயன்படுத்தப்படக் கூடாது.

    விவசாயிகள், உற்பத்தியாளர்கள் அமைப்பு / கூட்டுறவு சங்கங்கள் / மாநில ஏஜென்சிகள் ஆகியனவும் இந்த நிதியத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு மாநில அரசின் உறுதியளிப்பு அல்லது சமமான பிணையம் தேவைப்படும்.  விவசாய கூட்டுறவு சங்கங்கள் இந்த நிதியத்தை புதுமையான தொகுப்புகள் அடிப்படையிலான சமுதாய பாசனத்திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

   இத்திட்டத்திற்கென ஆலோசனைக் குழு ஒன்றும் வழிநடத்தும் குழு ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. ஆலோசனைக்குழு, கொள்கை வழிகாட்டுதல் வழங்குவதுடன் திட்டமிடல், ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு ஆகியவற்றை மேற்கொள்ளும். வழிநடத்தும் குழு, திட்டங்களை ஆய்வு செய்து அனுமதி அளித்தல், ஒருங்கிணைப்பு, காலத்துடன் கூடிய அமலாக்கத்தை உறுதி செய்யும் கண்காணிப்பு ஆகியவற்றை மேற்கொள்ளும்.

திட்டத்தில் சேருபவை:

    இந்தத் திட்டம் இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.  குறு பாசன நிதியம் செயல்படும்போது, குறு பாசனத்தில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் இந்த நிதியத்தை பயன்படுத்திக்கொள்ள ஊக்குவிக்கப்படும். சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களைப் போல விவசாயிகளுக்கு ஊக்குவிப்புச் சலுகை வழங்கவும் நிதியத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். சமுதாய மற்றும் புதுமை திட்டங்கள் செயல்படுத்தப்படும் போது மாநிலங்களில் குறு பாசன கூடுதல் பரப்பு ஏற்படும்.

திட்டத்தின் பின்புலம்:

    குறு பாசனத்தின் கீழ் 69 புள்ளி 5 மில்லியன் ஹெக்டேர் பரப்பு கொண்டுவரப்படுவதற்கு சாத்தியம் இருப்பதாக குறு பாசனம் குறித்த பணிக்குழு மதிப்பிட்டுள்ளது. தற்போது குறு பாசனத்தின் கீழ் 10 மில்லியன் ஹெக்டேர் பரப்பு மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், செயலாளர்கள் குழு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 மில்லியன் ஹெக்டேர் பரப்பை குறு விவசாயத்தின் கீழ் கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனை நிறைவேற்ற ஆண்டுதோறும் சுமார் ஒரு மில்லியன் ‘ஹெக்டேர் பரப்பு கூடுதலாக குறு பாசனத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். பிரதமர் விவசாய பாசனத்திட்டம், குறு பாசன நிதியம்,  ஆகிய இரண்டின்  ஆதாரங்களை திறம்பட பயன்படுத்தி கீழ்கண்ட வழிகளில் இந்த இலக்கினை அடையலாம்.

  • சிறப்பு மற்றும் புதுமை திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் குறு பாசன பரப்பை விரிவாக்குவதற்கு ஆதாரங்களை திரட்ட மாநிலங்களுக்கு வசதி ஏற்படுத்தித் தருதல்.
  • பிரதமர் விவசாய பாசனத்திட்டத்தின் கீழ், கிடைக்கும் சலுகைகளுக்கு அப்பாற்பட்டு குறு பாசனத்திற்கு ஊக்குவிப்புகள் வழங்கி குறு பாசன அமைப்புகளை நிறுவ விவசாயிகளை ஊக்குவித்தல்.

-------



(Release ID: 1532336) Visitor Counter : 176


Read this release in: English