நிதி அமைச்சகம்

அடல் ஓய்வூதியத் திட்ட சந்தாதாரர்கள் எண்ணிக்கை திட்டத்தின் 3 ஆண்டுகள் நிறைவின்போது ஒரு கோடி அளவை மிஞ்சியுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 15 MAY 2018 5:18PM by PIB Chennai

அடல் ஓய்வூதியத் திட்ட சந்தாதாரர்கள் எண்ணிக்கை திட்டத்தின் 3 ஆண்டுகள் நிறைவின்போது ஒரு கோடி அளவை மிஞ்சியுள்ளது. அடல் ஓய்வூதியத் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி 2015 மே மாதம 9ஆம் தேதி கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் தற்போதைய சந்தாதாரர்கள் எண்ணிக்கை 1.10 கோடியாகும்.

  தமிழ்நாட்டில் அடல் ஓய்வூதியத் திட்டத்தில் 8,14,917 சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர்.

  அடல் ஓய்வூதியத் திட்டத்தின் சந்தாதாரர் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது. இந்தச் சேவை அனைத்து வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கிடைக்கிறது. நாடெங்கும் 20 ஆயிரம் அஞ்சல் நிலையங்கள் உள்ளிட்ட 1.60 லட்சம் கிளைகளில் அடல் ஓய்வூதியத் திட்டக் கணக்குச் சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்தக் கிளைகளில் சுமார் 90 சதவீதம் கடந்த 3 ஆண்டுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வூதியக் கணக்குகளைத் திரட்டியுள்ளன. இன்றையத் தேதிவரை இந்த திட்டத்தின்கீழ் ரூ.3950 கோடி சந்தாவாக வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடங்கியதிலிருந்து 2018 மார்ச் வரை 9.10 சதவீதம் ஆண்டு வளர்ச்சி வீதத்தை உருவாக்கியுள்ளது.

  மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in  என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

============
 


(வெளியீட்டு அடையாள எண்: 1532195) வருகையாளர் எண்ணிக்கை : 147
இந்த வெளியீட்டை படிக்க: English