பிரதமர் அலுவலகம்

மலேசியப் பிரதமர் மாண்புமிகு துன் டாக்டர். மகாதீர் முகமதுக்கு, பிரதமர் பாராட்டு

Posted On: 14 MAY 2018 5:18PM by PIB Chennai

 பிரதமர் திரு. நரேந்திர மோடி மலேசியாவில் பிரதமராக பதவியேற்றுள்ள மாண்புமிகு துன் டாக்டர். மகாதீர் முகமதை இன்று (14.05.2018)தொலைபேசியில் அழைத்து அவருக்கு பாராட்டுத் தெரிவித்தார்.

  மலேசியாவின் அன்பான மக்களின் வளம் மற்றும் முன்னேற்றத்திற்கு நல்வாழ்த்துக்களை பிரதமர் திரு. மோடி தெரிவித்துக்கொண்டார். இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையேயுள்ள நெருங்கிய, பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகள், பகிர்ந்துகொள்ளப்பட்ட நன்னெறிகள், ஆர்வங்கள், இருநாட்டு மக்களிடையேயான துடிப்பான உறவுகள் ஆகிய வலுவான அடித்தளத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் கூறினார். இந்தியா -  மலேசியா ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த பிரதமர் திரு. மகாதீர் முகமதுடன் சேர்ந்து உழைப்பதை எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டார்.

==========

 


(Release ID: 1532078) Visitor Counter : 86