PIB Headquarters
வேலூர் மற்றும் கடலூரில் பாஸ்போர்ட் சிறப்பு முகாம்
Posted On:
14 MAY 2018 5:22PM by PIB Chennai
சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சனிக்கிழமை (19.05.2018) அன்று சிறப்பு பாஸ்போர்ட் முகாமை வேலூர் மற்றும் கடலூரில் உள்ள அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தில் நடத்துகிறது. பொதுமக்களின் தேவையை நிறைவேற்றவும் அடிக்கடி பயணம் மேற்கொள்வோர் கால நீடிப்பு செய்வதற்கு நேரம் ஒதுக்கக் கோருவதில் சிரமங்களைத் தவிர்த்து விண்ணப்பங்கள் அளிப்பதற்கும் இந்த முகாம் நடத்தப்படுகிறது.
வேலூர் மற்றும் கடலூரில் உள்ள அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையம் (19.05.2018) சனிக்கிழமை அன்று மற்ற பணி நாட்களைப் போல செயல்படும். விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இந்த முகாமின் மூலம் சுமார் 170 விண்ணப்பதாரர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பாஸ்போர்ட் முகாமில் பங்கு பெற அனைத்து விண்ணப்பதாரர்களும் www.passportindia.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் பதிவு செய்து ஏ.ஆர்.என். (விண்ணப்பப் பதிவு எண்-ARN) உருவாக்கி இணையதளத்தின் வழியே உரிய கட்டணத்தைச் செலுத்தி பின்னர் சந்திப்பதற்கான நேரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த முகாமில் பங்கு பெறும் விண்ணப்பதாரர்கள் பார்வை நேரம் மற்றும் ஏ.ஆர்.என். விவரங்களை அச்சிட்ட வடிவத்தில் வேலூர் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்திற்குக் கொண்டு வர வேண்டும். தேவையான ஆவணங்களின் மூலங்களையும் சுயசான்று அளிக்கப்பட்ட இரண்டு நகல்களையும் கொண்டு வர வேண்டும். புதிய மற்றும் மறுவெளியீட்டுக்கான வகையிலான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
19.05.2018 சனிக்கிழமை அன்று நடைபெறும் முகாமிற்கான சந்திப்பு நேர ஒதுக்கீடு 16.05.2018 (புதன்கிழமை) அன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும். முகாம் நாளன்று அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேர அடிப்படையில் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும். நேர்காணலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மற்றும் நிராகரிக்கப்பட்டுள்ள டோக்கன்கள் இந்த முகாமின்போது பரிசீலிக்கப்படமாட்டாது.
*****
ரெசின்/அரவி
(Release ID: 1532050)
Visitor Counter : 108