குடியரசுத் தலைவர் செயலகம்

ஜெய்ப்பூரில் குடியரசுத் தலைவரைச் சிறப்பித்து வரவேற்பு அளிக்கப்பட்டது

प्रविष्टि तिथि: 13 MAY 2018 8:22PM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், தம்மைச் சிறப்பித்து அம்மாநில அரசு  இன்று (13.05.2018)அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில்  உரையாற்றினார்.

   நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் ராஜஸ்தான் மாநில மக்கள் தங்களது மாநிலம், மொழி மற்றும் மனித நெறிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பவர்கள் என்று கூறினார். இயற்கைச் சீற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை இந்த ஆண்டு சந்தித்தபோதும், ராஜஸ்தான் மக்கள் தங்களது சமூக பொருளாதார மேம்பாட்டுத் தேடலை தொடர்ந்து நிலைநிறுத்தி வந்துள்ளனர் என்றார். கண்காட்சிகள், திருவிழாக்கள், கலை, இலக்கியம் உள்ளிட்ட தங்களது துடிப்பான வண்ணமிகு பண்பாட்டு பாரம்பரியத்தை அவர்கள் வளப்படுத்தி வந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

  மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

============


(रिलीज़ आईडी: 1532023) आगंतुक पटल : 122
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English