நித்தி ஆயோக்
அடல் டிங்கரிங் மாரத்தானின் முதன்மையான 30 கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன
प्रविष्टि तिथि:
10 MAY 2018 5:30PM by PIB Chennai
இந்தியாவில் சிறந்த மாணவக் கண்டுபிடிப்பாளர்களை அடையாளம் காணும் முயற்சியாக நித்தி ஆயோக்கின் அடல் கண்டுபிடிப்பு இயக்கத்தில் இடம்பெற்றுள்ள அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்கள் அடல் டிங்கரிங் மாரத்தானுக்கு ஏற்பாடு செய்திருந்தன. தூய்மையான எரிசக்தி, நீராதாரங்கள், கழிவு மேலாண்மை, சுகாதாரம், நவீன போக்குவரத்து வேளாண் தொழில்நுட்பம் என ஆறு துறைகளில் நாடு முழுவதும் ஆறு மாதங்கள் இது நடத்தப்பட்டது.
தேசிய தொழில்நுட்பத்தின் நிகழ்ச்சியில் அடல் டிங்கரிங் சோதனைக்கூட மாரத்தனில் முதன்மையான 30 புதிய கண்டுபிடிப்புகள் புத்தக வடிவில் காட்சிப்படுத்தப்பட்டன. சிறார்கள், ஊக்குவிப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் இதில் தொகுக்கப்பட்டிருந்தன. இந்த தொகுப்பு நூலினை நித்தி ஆயோக்கின் துணைத்தலைவர் டாக்டர் ராஜீவ் குமார், அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கத்தின் இயக்குநர் திரு. ரமணன் ராமநாதன் ஆகியோர் வெளியிட்டனர்.
“மே 16 அன்று இந்தியாவின் பிரதமராக முதன் முதலாக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட திரு.அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்காலம் சிறார்களின் கைகளில் உள்ளது என்பதில் அவர் நம்பிக்கைக் கொண்டிருந்தார். அவரது ஆட்சியை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம் அவரது கனவுகளை நனவாக்கி வருகிறது” என்று டாக்டர் குமார் கூறினார். “எதையுமே பிரதி எடுக்கும் சமூகமாக இல்லாமல், புதுமைகளை உருவாக்கும் சமூகமாக மாறுகின்ற சகாப்தம் வந்து கொண்டிருக்கிறது” என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களை www.pib.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.
----
(रिलीज़ आईडी: 1531882)
आगंतुक पटल : 164