மத்திய பணியாளர் தேர்வாணையம்
தேசிய ராணுவ அகாடமி & கடற்படை அகாடமி தேர்வு (ii), 2017 – இறுதி முடிவுகள் வெளியீடு
Posted On:
09 MAY 2018 4:28PM by PIB Chennai
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2017 செப்டம்பர் 10 அன்று நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட நேர்முக தேர்வுகளின் முடிவு அடிப்படையில், தேசிய ராணுவ அகாடமியின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைப் பிரிவுகளுக்கான 140-வது அணி மற்றும் கடற்படை அகாடமியின் இந்திய கடற்படை அகாடமி பயிற்சியின் நூறாவது அணிக்கு, 2018 ஜூலை மாதம் தொடங்க உள்ள பயிற்சியில் சேர, 447 விண்ணப்பத்தாரர்கள் அவர்களது மதிப்பெண் தரவரிசைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பயிற்சி தொடங்கும் நாள் போன்ற விரிவான விவரங்களுக்கு, பாதுகாப்பு அமைச்சகத்தின் www. Join Indian army. nic.in www.nausena-bharti.nic.in and www.careerairforce.nic.in. என்ற இணையதளங்களை காணவும்.
அனைத்து விண்ணப்பத்தாரர்களின் தேர்வும் தற்காலிகமானது.
தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின், http:// www.upsc.gov.in. என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம். எனினும், இறுதி முடிவு வெளியான நாளிலிருந்து 15 நாட்களுக்கு பிறகே விண்ணப்பத்தாரர்களின் மதிப்பெண் விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தில் காணலாம்.
(Release ID: 1531789)
Visitor Counter : 204