நிதி அமைச்சகம்
ஜி.எஸ்.டி. கட்டமைப்புப் பகிர்வு முறையில் மாற்றம்
Posted On:
04 MAY 2018 4:09PM by PIB Chennai
மத்திய-மாநில அரசுகள், வரி செலுத்துவோர் மற்றும் வரிவிதிப்புடன் தொடர்புடையவர்களை உள்ளடக்கி, நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பை நடைமுறைப்படுத்துவதை நோக்கமாக கொண்டு, 2013 ஆம் ஆண்டு மார்ச் 28-ந் தேதி 1956 ஆம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ் சரக்கு மற்றும் சேவைகள் வரிக் கட்டமைப்பை செயல்படுத்துவதற்கான லாப நோக்கு இல்லாத தனியார் நிறுவன அமைப்பு உருவாக்கப்பட்டது.
தற்போது மத்திய-மாநில அரசுகள் தலா 24.5 சதவீத சமபங்குகளைக் கொண்டுள்ளன. எஞ்சிய 51 சதவீதம் அரசு சாரா நிறுவனங்களிடம் உள்ளன. பல்வேறு முறைகளின் வாயிலாக சரக்கு மற்றும் சேவை வரி கட்டமைப்பு அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. பதிவு செய்தல், வருமானக் கணக்கு தாக்கல் செய்தல், வரிசெலுத்துதல், கட்டணத்தை திரும்பப் பெறுதல் ஆகிய நடைமுறைகள் செயல்பாட்டில் உள்ளன. இந்த கட்டமைப்பு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உள்ளிட்ட லட்சக்கணக்கான வணிக நிறுவனங்களில் தரவுகளைக் கையாண்டு வருகிறது. இந்த செயல்பாடு காரணமாக அந்த கட்டமைப்பை முழுவதும் அரசுக்கு சொந்தமான நிறுவனமாக மாற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் உணர்ந்துள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு இன்றைய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ரூ.5.1 கோடி மதிப்பிலான சரக்கு மற்றும் சேவை வரி கட்டமைப்பில் உள்ள அரசு சாரா நிறுவனங்களிடம் உள்ள 51 சதவீத பங்குகள் முழுவதையும் கையகப்படுத்துவது, அதே போல மத்திய-மாநில அரசுகளிடம் உள்ள சமபங்குகளையும் வாங்குவது, சரக்கு மற்றும் சேவை வரி கட்டமைப்பு வாரியம் தனியார் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்கான நடைமுறைகளை தொடங்க அனுமதிப்பது ஆகியவற்றை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.
சரக்கு மற்றும் சேவை வரி கட்டமைப்பு வாரியத்தில் உள்ள ஊழியர்களை விதிமுறைகளுக்கு உட்பட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு பணியில் தொடர அனுமதிப்பது, விதிமுறைகளின்படி மேலும் ஊழியர்களை ஒப்பந்தப் அடிப்படையில் அனுமதிப்பது போன்ற நடைமுறைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
மத்திய-மாநில அரசுகள் இந்தக் கட்டமைப்புக்கு வழங்கும் நிதி, அலுவலக பராமரிப்பு முறைகளுக்கான செலவு ஆகியவற்றை தொடர்ந்து அளித்து வரும்.
(Release ID: 1531616)