மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

சுவயம் மூலம் உயர்கல்வி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் நிகழ்ச்சிகளுக்காக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் 75 தேசிய ஆதார மையங்களை அறிவித்துள்ளது

Posted On: 04 MAY 2018 4:08PM by PIB Chennai

சுவயம் மூலம் உயர்கல்வி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் நிகழ்ச்சிகளுக்காக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் 75 தேசிய ஆதார மையங்களை அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் கற்பித்தல் குறித்த பண்டிட் மதன் மோகன் மாளவியா தேசிய இயக்கத்தின் கீழ் செயல்படும் மத்திய பல்கலைக்கழகங்கள், இந்திய அறிவியல் நிறுவனம், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள், மாநிலப் பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான தேசியப் பயிற்சி நிறுவனம், திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் உட்பட 75 உயர்கல்வி நிறுவனங்களை மத்திய அரசு இதற்காக்க் கண்டறிந்து அறிவித்துள்ளது. இதில் சென்னையில் உள்ள ஐஐடி மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு உற்பத்திக்கான இந்திய  நிறுவனம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இந்த முயற்சியின் மூலம் பணியில் உள்ள ஆசிரியர்கள், தங்களது பாடத் திட்டம் மற்றும் பணி முதிர்ச்சி ஆகியவற்றை பொருட்படுத்தாமல் தொழில்நுட்பம் மூலமாக தங்களது துறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை தெரிந்து கொள்ளலாம்.

இந்த முன்முயற்சி மூலம் ஆசிரியர்கள் பயனடைவதுடன், அவர்களுக்கு வசதிப்படும் நேரத்தில் இதை கற்றுக் கொள்ளலாம். சுவயம் ஆன்லைன் தொழில்நுட்பத்தின் வாயிலாக தொழில் முறை முன்னேற்றத்தை ஆசிரியர்கள் பெறுவதற்கு இது உதவிகரமாக இருக்கும்.


(Release ID: 1531615) Visitor Counter : 234


Read this release in: English , Marathi , Bengali