பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பு பொருள்களின் பட்டியல் நிர்வாகம் மற்றும் விற்பனையை டிஜிட்டல்மயமாக்குகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 08 MAY 2018 12:36PM by PIB Chennai

பழங்குடியினர் நல அமைச்சகத்தின் பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டுக் கூட்டமைப்பு தனது இந்திய பழங்குடியினர் அங்காடிகளிலும், மண்டல அலுவலகங்களிலும், தலைமை அலுவலகத்திலும் பொருள்களின் பட்டியலை கண்காணிக்க சில்லறை விற்பனைப் பட்டியல் மென்பொருளை (ஆர்ஐஎஸ்) செயல்படுத்துகிறது. கொள்முதல் தொடங்கி விற்பனை வரை தானியங்கி முறையில் பரிவர்த்தனை நடைமுறைகள், முக்கியமான கொள்முதல் வழிமுறைகள், இருப்பு நிலைமை, விற்பனை விவரம் என ஒட்டுமொத்த சில்லறை வர்த்தக செயல்பாடுகளை முறைப்படுத்துவதற்காக அனைத்து மண்டல அலுவலகங்களிலும், அங்காடிகளிலும் மின்னணு முறை பயன்பாட்டில் உள்ளது. ஆர்ஐஎஸ் மென்பொருள் அமலாக்கம் முழுமையான வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதோடு சில்லறை விற்பனையின் கீழ் நடைபெறும் பல்வேறு பரிவர்த்தனைகளையும் கண்காணிக்க உதவும்.

சில்லறை விற்பனை மென்பொருள் (ஆர்ஐஎஸ்) சில்லறை விற்பனை நடைமுறையின் பல்வேறு நிலைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. மண்டல அலுவலகங்களில் வியாபாரிகளுக்கான பொருட்கள் தெரிவு, தெரிவு செய்யப்பட்ட பொருட்களுக்கு குறியீட்டை உருவாக்குதல், பிஓஎஸ் மூலம் கொள்முதல் ஆர்டர், இருப்பு, விவரப் பட்டியல் தயாரித்தல், பொருட்களின் நிர்வாகம், மண்டல அலுவலகத்தில் கொள்முதல் மற்றும் விற்பனையை கண்காணித்தல், தலைமை அலுவலகத்தில் கொள்முதல்/விற்பனை விவர அறிக்கையை தயாரித்தல் ஆகியவையும் இந்த மென்பொருளில் அடங்கியுள்ளன.

 


(வெளியீட்டு அடையாள எண்: 1531613) வருகையாளர் எண்ணிக்கை : 200
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी