பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

நாடு முழுவதும் 315 மாவட்டங்களில் தேசிய ஊட்டச்சத்து இயக்கத்திற்காக உலக வங்கியிடம் 200 மில்லியன் டாலர் கடன் பெற ஒப்ப்ந்தம் கையெழுத்து

இடுகை இடப்பட்ட நாள்: 07 MAY 2018 6:01PM by PIB Chennai

தேசிய ஊட்டச்சத்து இயக்கத்திற்காக மத்திய அரசு 200 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தம் ஒன்றில் உலக வங்கியுடன் மத்திய அரசு கையொப்பமிட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்குள் பூஜ்யம் முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்தின்மையை 38.4 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்க இந்தக் கடன் அரசுக்கு உதவும்.

 

முழுமையான ஊட்டச்சத்திற்கான பிரதமரின் பரஸ்பரத் திட்டம் எனப்படும் போஷான் திட்டத்தை கடந்த 2018 மார்ச் 8ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவில் பிரதமர் தொடங்கி வைத்தார்.

 

உலக வங்கி ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம், அமைப்புகளை வலுப்படுத்தல் மற்றும் ஊட்டச்சத்து மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றின் மூலம் நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போஷான் இயக்கம் மூன்று ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படும். இன்று ஒப்புதல் அளிக்கப்பட்ட கடன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 315 மாவட்டங்களில் இத்திட்டத்தை முதல்கட்டமாக நடைமுறைப்படுத்த உதவிடும்.

 

கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துச் சேவைகளை அளிக்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகளின் உள்ளடக்கம் மற்றும் தரத்தை மேம்படுத்துவதில் கண்ணோட்டம் கொண்ட இந்தத் திட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவது, சமூகத்தை ஊக்குவிப்பதற்கான நிறுவன நுணுக்கத்தை மேம்படுத்துவது, பழக்க வழக்க மாற்றத்திற்கான தொடர்பு, பொதுமக்களை ஈடுபடுத்தும் முறைகளை பலப்படுத்துவது, குறைபாடுகள் தீர்வுகாண்பது மற்றும் கண்காணிப்பை மேம்படுத்தும் வகையில் மொபைல் அடிப்படையிலான தொழில்நுட்பத்தை உருவாக்குவது ஊட்டச்சத்து தாக்கத்திற்கான 1000 நாள் சாளர முறையில் சேவைகளை நிர்வகித்தல் ஆகியவற்றுக்கான முதலீடுகள் உள்ளடங்கும். மேலும் ஊட்டச்சத்து தொடர்பான அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து மாநிலங்கள் மற்றும் சமூக ஊட்டச்சத்து சுகாதார பணியாளர்கள் முடிவுகளில் கண்ணோட்டம் செலுத்த வசதி ஏற்படுத்தும் வகையில் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை அளப்பதையும் இந்த திட்டம் உறுதிப்படுத்தும்.

 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1531599) வருகையாளர் எண்ணிக்கை : 153
இந்த வெளியீட்டை படிக்க: English