நிதி அமைச்சகம்

வருவான வரி கணக்கு தாக்கலுக்கான அமைச்சர்குழு தெரிவித்த பரிந்துரைகள் அடிப்படையில் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் படிவத்தை எளிமைப்படுத்த ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒப்புதல்

Posted On: 04 MAY 2018 4:07PM by PIB Chennai

வருமான வரிக் கணக்கு தாக்கல் முறை எளிமைப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அமைச்சர் குழுப் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய வடிவத்திலான ஜி.எஸ்.டி.  கணக்குத் தாக்கல் செய்வதற்கான கொள்கைகளுக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் தனது 27வது கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளித்தது. புதிய கணக்கு தாக்கல் வடிவத்தில் உள்ள முக்கி8ய அம்சங்கள் வருமாறு:

  1. ஒரு மாதாந்திர கணக்கு
  2. ஒரே மாதிரியான விலைப்பட்டியல்
  3. எளிமையான கணக்கு வடிவம் மற்றும் வருமான வரி தகவல்
  4. இருப்பு தானாக திரும்பாது
  5. மீட்சி மற்றும் திருப்புதலுக்கான உரிய நடைமுறை
  6. விநியோகர் தரப்பு கட்டுப்பாடு
  7. மாற்றம்
  8. கணக்கு  மற்றும் நடைமுறையின் உள்ளடக்கம்: கணக்கில் நிரப்ப்ப்பட வேண்டிய உள்ளடக்கம்/தகவல்களை குறைப்பதன் மூலம் கணக்குத் தாக்கல் எளிமைப்படுத்தப்பட வேண்டும். கணக்குத் தாக்கல் படிவம், வர்த்தக நடைமுறை மற்றும் சட்ட ரீதியான மாற்றங்கள் குறித்த விவரங்கள் கொள்கைகள் அடிப்படையில் சட்டக் குழுவால் மேற்கொள்ளப்படும்.  வர்த்தகத்தில் இணக்கமாக இருப்பதற்கான சுமையை குறைக்கவும் எளிதாக வர்த்தகம் செய்யும் கொள்கையை பின்பற்றவும் இந்த எளிமையாக்கப்பட்ட கணக்கு தாக்கல் வடிவத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது.

மேலும் விவரங்கள் பெற: www.pib.nic.in

*****

 


(Release ID: 1531543)
Read this release in: English