நிதி அமைச்சகம்

எதிர்காலத்திற்கான, விரிவாற்றலுடைய மற்றும் டிஜிட்டல் மய உள்கட்டமைப்பு ‘ தொடர்பான 4 ஆவது பிராந்திய மாநாடு பெங்களூரில் நிறைவடைந்தது

Posted On: 04 MAY 2018 2:27PM by PIB Chennai

இந்தியத் தொழிற்துறைக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் மத்திய அரசின் நிதி அமைச்சகமும், வளரும் நாடுகளுக்கான ஆய்வு மற்றும் தகவல் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த ’ எதிர்காலத்திற்கான, விரிவாற்றலுடைய மற்றும் டிஜிட்டல் மய உள்கட்டமைப்பு ‘ தொடர்பான 4 ஆவது பிராந்திய மாநாடு பெங்களூரில் இன்று         ( 04.05.2018 ) நிறைவடைந்தது.

இந்த இரண்டு நாள் மாநாடு முக்கியமாக, எதிர்காலத்திற்கான, விரிவாற்றலுடைய மற்றும் டிஜிட்டல் மய உள்கட்டமைப்பு,  மூலவளங்களைத் திரட்டுதல் மற்றும் உருவாகும் சவால்கள் ஆகியவற்றுக்கான தேவை என்ற கண்ணோட்டத்தில் சவால்களும் வாய்ப்புகளும் உள்ளிட்ட மூன்று விரிந்த தளத்தில் இந்த இரண்டு நாள் மாநாடு முக்கியமாக அழுத்தம் கொடுத்தது.

உள்கட்டமைப்பு மேம்பாட்டைப் பொறுத்தவரையில் நீடித்த எதிர்காலத்திற்கான ஒட்டுமொத்தப் புரிதலுக்காக இந்த  மூன்று கவனக்குவிப்புப் பகுதிகளில் ஒரே நேரத்தில் செயல்படுவதே இந்தக் குறிப்பிட்ட மாநாட்டின் பின்புல நோக்கமாக இருந்தது.


(Release ID: 1531355)
Read this release in: English