குடியரசுத் தலைவர் செயலகம்

தொழிலாளர் மற்றும் புறக்கணிக்கப்பட்டார்களின் நல்வாழ்வு இன்றி எந்த சமுதாயமும் முன்னேறாது: குடியரசுத் தலைவர்

Posted On: 29 APR 2018 4:14PM by PIB Chennai

மத்திய பிரதேச மாநில அரசு குணாவில் இன்று (2018 ஏப்ரல் 29ம் தேதி) ஏற்பாடு செய்திருந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் மாநாட்டில் ல் குடியரசு த்லைவர் திரு. ராம் நாத் கோவிந்த் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், உழைக்கும் பிரிவினர், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பின்தங்கியவர்களின் நல்வாழ்வு குறித்த சிந்தனை இன்றி எந்த சமுதாயமும் முன்னேற முடியாது என்றார். இந்திய தொழிலாளர் துறையில் அமைப்புசாரா தொழிலாளர்களின் பங்களிப்பு 80 சதவீதத்திற்கு மேல் உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வேளாண்மை மற்றும் கட்டுமானத் துறையில் பணிபுரிகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்புக்கான பெரும் தேவை உள்ளது. அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு குறியீட்டை இந்திய அரசு உருவாக்கி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார். இந்த திசையில் மத்திய பிரதேச அரசும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

*****



(Release ID: 1530848) Visitor Counter : 101


Read this release in: English