எரிசக்தி அமைச்சகம்

மின்மயமாக்கப்பட்ட கிராமங்கள் குறித்த விளக்கத்திற்கு விளக்கம்

Posted On: 30 APR 2018 6:21PM by PIB Chennai

மின்மயமாக்கம் செய்யப்பட்ட கிராமங்களுக்கான விளக்கம்:

மின்மயமாக்கப்பட்ட கிராமம் என்பது ஒரு கிராமத்தில் குறைந்தபட்சம் 10 சதவீத வீடுகளுக்காவது மின்சார இணைப்பு அளிக்கப்பட்டிருப்பதை கட்டாயமாக்குவதுடன் 10 சதவீத வீடுகளுக்கு மட்டுமே மின்சார இணைப்பு அளிக்கப்பட வேண்டும் என வரையறை செய்யாத ஒரு மரபுவழி பிரச்சனையாகும். மாநிலங்களில் இருந்து சமீபத்தில் பெறப்பட்ட அறிக்கைகளின்படி கிராமப்புறங்களில் மின்மயமாக்கப்பட்ட அளவு 82 சதவீதத்திற்கும் கூடுதலாக அதாவது 47 முதல் 100 சதவீதமாக பல்வேறு மாநிலங்களில் உள்ளது. காரணம் ஏதேனும் சொல்லிக் கொண்டிருந்தால் இந்த அளவுக்கு வீடுகளுக்கு மின்சாரம் அளிக்கப்பட்டிருப்பதை எட்ட முடியாமல் போகும். பல்வேறு பகுதிகள் மற்றும் மாநிலங்களில் காணப்படும் இந்த அளவுக்கான வேறுபாட்டிற்கு அதன் அளவு, பலவகையான பூகோள அடிப்படையிலான அம்சங்கள், இருப்பிடம், ஆதாரங்கள் மற்றும் வீடுகளுக்கு மின்சார இணைப்பு அளிப்பதில் பல்வேறு மாநிலங்கள் மேற்கொண்ட மாறுபாடான முயற்சிகள் காரணமாகும். மத்திய அரசு இந்த கூற்றுகளில் இருந்து விலகி, 2018 டிசம்பர் 31ம் தேதிக்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு அளிக்கும் வகையில் சவுபாக்கியா என்னும் பிரதமர் சஹஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா திட்டத்தை தொடங்கியுள்ளது. எனவே கிராமங்களுக்கு மின் இணைப்புக்கான விளக்கம் குறித்த விவாதம் நடப்பு சூழலில் அதன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டது.

*****


(Release ID: 1530756) Visitor Counter : 148


Read this release in: English