தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
மின்னணுவில் பணம் செலுத்தல் வரித்தாக்கலுக்குப் புதிய வழிமுறை
Posted On:
27 APR 2018 6:15PM by PIB Chennai
நிறுவனங்கள் மாதந்தோறும் இ-சேவா இணையதளம் (e-sewa portal) மூலமாக மின்னணு பணம் செலுத்துதல், கணக்குத் தாக்கல் (Electronic-Challan-cum-Return) ஆகியவற்றை மேற்கொள்கின்றன.
நிறுவனங்கள் மாதந்தோறும் மின்னணு வழி மின்னணு பணம் செலுத்துவது, கணக்கு தாக்கல் செய்வது (ECR) ஆகியவற்றுக்கு உதவுவதற்காக ஒரு வழிமுறையை (offline tool) ஊழியர் வருங்கால வைப்பு நிதியம் உருவாக்கியுள்ளது. அப்பணிகளை ஒருங்கிணைந்த இணையம் (Unified Portal) வழியாக மேற்கொள்வதற்கு முன்பு இந்த வழிமுறையைப் பயன்படுத்தலாம். பதிவேற்றம் செய்வதற்கு முன்னதாக நிறுவன உமையாளர்கள் கணக்குகளை சரிபார்க்கவும் திருத்தவும் முழயும்.
இதை www.epfindia.gov.in.in>>OurServices>>For Employers>>ECR Validation Tool என்ற தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
****
(Release ID: 1530659)