அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தேசிய உயிரிமருந்தாக்க இயக்கத்திற்கு இந்திய அரசுக்கும் உலக வங்கிக்கும் இடையே சட்டரீதியான உடன்படிக்கை கையொப்பம்
Posted On:
25 APR 2018 6:46PM by PIB Chennai
இந்தியாவில் வளர்ந்துவரும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பலப்படுத்தும் வகையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறை, அனைவரையும் உள்ளடக்கிய கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்தவும் உயிரித் தொழில்நுட்பத் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிக்கவும் உயிரி மருந்து உற்பத்திக் கண்டுபிடிப்பு ஆராய்ச்சியை விரைவுபடுத்த தொழில்துறை மற்றும் கல்வித்துறை இணைப்புக்கான இயக்கம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இந்த இயக்கம் 250 மில்லியன் டாலர் மொத்தச் செலவில், 50 சதவீத உலக வங்கிக் கடனுடன் மேற்கொள்ளப்படும். உயிரி மருந்து உற்பத்திக்கான சிறந்த, மலிவான, புதுமையான வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் தொகுப்பாக இந்தியாவை ஆக்குவதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.
(Release ID: 1530399)