அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

தேசம் தழுவிய நேரக் குறிப்பு மற்றும் நேர ஒருங்கிணைப்பு முறையை நிறுவுவதற்கு சிஎஸ்ஐஆர் மற்றும் தொலைத் தொடர்புத்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது

Posted On: 25 APR 2018 6:22PM by PIB Chennai

தேசம் தழுவிய நேரக் குறிப்பு மற்றும் நேர ஒருங்கிணைப்பு முறையை நிறுவுவதற்கும் யுடிசி என்பிஎல் நேரத்திற்கு இணையாக நேர சமிக்ஞையை கண்டறிவதற்கும் தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபை – தேசிய இயற்பியல் சோதனைச் சாலை மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத் தொடர்புத்துறை ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தத் திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும். நேர ஒருங்கிணைப்பு மையங்கள் (டிஎஸ்சி-க்கள்) நான்கு பெரு நகரங்களின் உரிமம் பெற்ற சேவைப் பகுதி(எல்எஸ்ஏ)களில் முதல் கட்டத்திலும், எஞ்சியுள்ள 22 எல்எஸ்ஏக்களில் இரண்டாம் கட்டத்திலும் அமைக்கப்படவுள்ளன.

(2ஜி,  3ஜி, 4ஜி, 5ஜி போன்று) தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன் ஒருங்கிணைப்பின் வேகம் பெருமளவில் அதிகரித்து வரும் இந்த சகாப்தத்தில் கணினி சார்ந்த நிகழ்வுகளைப் பகுப்பாய்வு செய்யவும் ஒருங்கிணைக்கவும் பாதுகாப்பு முகமைகளுக்கு ஏற்படும் சிரமங்களைப் தவிர்க்க ஐஎஸ்டி  நேரக்குறிப்புடன் தொலைத்தகவல் தொடர்பு  வலைப்பின்னலை இணைப்பது இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். சிறப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் வலைப்பின்னலில் விடுபடல்களைக் குறைப்பதன் மூலம் கணினியின் பணிச்சுமையைக் குறைத்து தொலைத்தொடர்பு வலைப்பின்னல் திறனை மேம்படுத்த இந்தத் திட்டத்தின் அமலாக்கம் உதவும்.

                                *****



(Release ID: 1530295) Visitor Counter : 150


Read this release in: English