வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இ-வர்த்தகம் குறித்த தேசியக் கொள்கைக்குக் கட்டமைப்பை உருவாக்கும் சிந்தனையாளர்களின் முதலாவது கூட்டத்திற்கு சுரேஷ் பிரபு தலைமை வகித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
25 APR 2018 5:05PM by PIB Chennai
இ-வர்த்தகம் குறித்த தேசியக் கொள்கைக்குக் கட்டமைப்பை உருவாக்கும் சிந்தனையாளர்களின் முதலாவது கூட்டம் மத்திய தொழில் வர்த்தகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சுரேஷ் பிரபு தலைமையில் 24.04.2018 அன்று நடைபெற்றது.
இ-வர்த்தகம் குறித்த தேசியக் கொள்கைக்குக் கட்டமைப்பை உருவாக்கும் சிந்தனையாளர்கள் குழு அண்மையில் வர்த்தகத் துறையால் உருவாக்கப்பட்டது.
இ-வர்த்தகம் குறித்து விரிவான அனைத்தையும் உள்ளடக்கிய தேசியக் கொள்கையை உருவாக்கும் நோக்கத்துடன் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் இ-வர்த்தகத்துறையில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துச் சிந்தனையாளர்கள் கூட்டாகக் கருத்துப்பரிமாற்றம் செய்தனர். இ-வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்புப் போன்ற டிஜிட்டல் பொருளாதாரம், ஒழுங்குமுறை அமைப்பு, வரிவிதிப்புக் கொள்கை. தொடர் விரைவுத் தகவல், சர்வர் உள்நாட்டுமயம் வெளிநாட்டு நேரடி முதலீடு, தொடர்வு விரைவுத் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் வர்த்தகம் தொடர்பான அம்சங்கள் உள்ளிட்டவை சிந்தனையாளர்களால் விவாதிக்கப்பட்ட அம்சங்களில் சிலவாகும். இ-வர்த்தகத்தில் உலக நிலைமைகள் குறிப்பிட்ட பிரச்சினைகளில் உருவாகியுள்ள தேசிய நிலைமைகள் ஆகியவை சிந்தனையாளர்கள் குழு விவாதங்களின் மற்றொரு முக்கியப் பரிமாணமாகும்.
இ-வர்த்தகம் குறித்து இந்தியாவின் தேசியக் கொள்கைக்கு பரிந்துரைகளைத் தயார் செய்வதற்காகப் பணிக்குழு ஒன்றை அமைப்பது என்ற முடிவு சிந்தனையாளர்கள் குழுவின் முதலாவது கூட்டத்தின் முக்கிய விளைவாகும். மத்திய அரசிலிருந்தும், இ-வர்த்தக தொழில்துறையிலிருந்தும் பிரதிநிதிகள் மற்றும் இந்தத் துறை சார்ந்த அறிவுடன் கூடிய நிபுணர்களை உள்ளடக்கி இந்தப் பணிக்குழு பல்வேறு துணைக்குழுக்களாகப் பிரிக்கப்படும்.
ஆறு மாதங்களுக்குள் இந்தப் பணிக்குழு அதன் பரிந்தரைகளை இறுதி செய்யும்.
(வெளியீட்டு அடையாள எண்: 1530281)
வருகையாளர் எண்ணிக்கை : 148