தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

அக்கறையுள்ள அனைவருக்கும் உரிய நேரத்தில் சேவைகளையும், தகவல்களையும் அளிப்பதற்கான ஈ.பி.எப்.ஓ.-வின் புதிய திட்டங்கள்

Posted On: 25 APR 2018 3:27PM by PIB Chennai

அக்கறையுள்ள அனைவருக்கும் சேவை வழங்கவும், உரிய காலத்தில் தகவல்களை வழங்கவும் பல்வேறு மின்னணுத் திட்டங்களை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம், (ஈ.பி.எப்.ஓ.) எடுத்துள்ளது. மத்திய அரசின் குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை என்ற நெறியின்படி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊழியர்கள் தெரிவித்துள்ள தகவல் அடிப்படையில் அனைத்து புதிய சந்தாதாரர்களுக்கும் வயது பிரிவினை வாரியாக மதிப்பீடுகளை வெளியிட இந்த அமைப்பு தற்போது முடிவு செய்துள்ளது. புதிய ஊழியர்கள் வயது அடிப்படையில் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 18 முதல் 22 வரை, 22 முதல் 25 வரை, 26 முதல் 28 வரை, 29 முதல் 35 வரை, 35 வயதுக்கு கூடுதலானவர்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தப்பட்ட தகவல்கள் https://epfindia.gov.in/site_docs/exmpted_est/Payroll_Data_EPFO.pdf?id=sm5_index. என்ற வலைதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் தரவுகள் கொள்கை வரையவும், திட்டமிடலுக்கும், ஆராய்ச்சிப் பணிகளுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். பல்வேறு வயதுப் பிரிவுகளில் உள்ள ஊழியர்களுக்கான மதிப்பீடு பற்றித் திட்டமிடுவோருக்கு இதன் மூலம் நன்கு தெரியவரும்.

சந்தாதாரர்களின் கணக்குகளில் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகை வரவு வைக்கப்படுகிறது என்பது குறித்துக் குறுஞ்செய்திகள் மூலம்  ஈ.பி.எப்.ஓ. தகவல் தெரிவித்துவருகிறது. தற்போது வரவு வைக்கப்பட்டது குறித்த விவரம் ஆன்லைன் வழியான ஈ பாஸ்புக் மூலம் அவர்களுக்கு கிடைக்கும். இதற்கான உமங் என்ற கைபேசி செயலி மூலமும் தகவல் அளிக்கப்படுகிறது. மிஸ்டுகால் சேவை மூலமும் உறுப்பினர்களுக்கு இந்தத் தகவல் அளிக்கப்படுகிறது. இந்த முறைகளில் ஏதாவது ஒன்றினைப் பயன்படுத்தி மாதந்தோறும் உறுப்பினர்கள் செலுத்தும் தொகை பற்றிய விவரங்களை அவர்கள் அறிந்துகொள்ளலாம்.

எனினும் எந்த உறுப்பினரின் பங்களிப்பு, கணக்கில் செலுத்தப்படாமல் உள்ளதோ அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட மாட்டாது. தற்போது தகவல்களைக் குறுஞ்செய்தி/மின்னஞ்சல் மூலம் தங்களது கைபேசி எண்களை/மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்தவர்களுக்கு அவர்களது யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பருக்கு எதிராக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  

 



(Release ID: 1530248) Visitor Counter : 150


Read this release in: English