ஆயுஷ்

இந்தியாவுக்கும், சவோ டோமி மற்றும் பிரின்ஸ்பி நாட்டுக்கும் இடையே மூலிகைகள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

Posted On: 25 APR 2018 1:17PM by PIB Chennai

இந்தியாவுக்கும், சவோ டோமி மற்றும் பிரின்ஸ்பிக்கும் இடையே மூலிகைத்தாவரங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 14.03.2018 அன்று கையெழுத்திடப்பட்டது.

பின்னணி:

15 விவசாய பருவநிலை மண்டலங்களைக் கொண்டுள்ள இந்தியா உயிரி பலதரப்புத் தன்மையைப் பொறுத்தவரை உலகின் மிகவும் வளமான நாடுகளில் ஒன்று. மொத்தமுள்ள 17,000 முதல் 18,000 வரையிலான பூக்கும் தாவர இனங்களில் 7,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை நாட்டுப்புறப் பயன்பாட்டிலும், ஆவணப்படுத்தப்பட்ட ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் மருத்துவ முறை) போன்ற மருத்துவமுறைகளின் மருத்துவக்குணம் உள்ளவையாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 1,178 மூலிகைத்தாவரங்கள் வர்த்தகத்திற்கு உட்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் 242 வகை மூலிகைகள் ஆண்டுக்கு 100 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான அளவு பயன்படுத்தப்படுவதும் மதிப்பிடப்பட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவம் மற்றும் மூலிகைத் தொழிலுக்கு மருத்துவத் தாவரங்கள் முக்கிய ஆதாரங்கள் மட்டுமின்றி இந்திய மக்கள்தொகையில் பெரும் பகுதிக்கு வாழ்வாதாரத்தையும், ஆரோக்கியப் பாதுகாப்பையும் அளித்துவருகிறது. உலகளவில் பாரம்பரிய மற்றும் மாற்று மருத்துவப் பராமரிப்பு முறைகள் மறுமலர்ச்சிப் பெற்றுள்ளன. இதனால் இவற்றின் உலக வர்த்தகம் 120 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு நடைபெற்றுவருகிறது. இந்த வர்த்தகம் 2050-வது ஆண்டு வாக்கில் 7 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த இரண்டு நாடுகளின் ஒரே மாதிரியான புவியியல் பருவநிலைச் சூழலைக் கருத்தில்கொண்டால் வெப்பமண்டலம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் பெரும் எண்ணிக்கையான மருத்துவத் தாவரங்கள் வளர்கின்றன.

ஆயுஷ் மருத்துவமுறையை மேம்படுத்திப் பரப்ப வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில்கொண்டு நமது புரிந்துணர்வுஒப்பந்த வரைவு, மருத்துவத் தாவரங்கள் துறையில் நாட்டுக்கு நாடு வேறுபட்டு வருகிறது. சவோ டோமி மற்றும் பிரின்ஸ்பி ஜனநாயகக் குடியரசை பொறுத்தமட்டில் இந்த ஒப்பந்தவரைவு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.



(Release ID: 1530180) Visitor Counter : 127


Read this release in: English , Telugu