நீர்வளத் துறை அமைச்சகம்

கழிவு நீர் சுத்திகரிப்புத் திட்டங்கள் அனைத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றி முடிக்குமாறு அதிகாரிகளுக்கு கட்கரி அறிவுறுத்தல்

Posted On: 24 APR 2018 4:39PM by PIB Chennai

பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுவரும் கழிவு நீர்ச் சுத்திகரிப்பு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம், மத்திய நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு, சாலைப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி தலைமையில் புதுதில்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்கான தேசிய இயக்கத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடையே பேசிய அமைச்சர், இந்த மாநிலங்களில் ஒப்பளிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றி முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

பீகாரில் 20 கழிவு நீர் சுத்திகரிப்புத் திட்டங்கள் ஒப்பளிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் 13 கழிவு நீர் சுத்திகரிப்புத் திட்டங்கள் ஒப்பளிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட்டில் 2 கழிவு நீர் சுத்திகரிப்புத் திட்டங்கள் ஒப்பளிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தைக் காணவும்.


(Release ID: 1530084)
Read this release in: English