சுற்றுலா அமைச்சகம்
95 புகழ் பெற்ற நினைவுச் சின்னங்களில் சுற்றுலாவுக்கு உகந்த வசதிகளை மேம்படுத்துவதற்கான மேற்பார்வை மற்றும் தொலைநோக்குக் குழு நினைவுச் சின்னங்கள் - தோழர்கள் என்ற தகுதிக்கான 31 பேரைத் தேர்ந்தெடுத்துப் பட்டியலிட்டுள்ளது
Posted On:
24 APR 2018 4:41PM by PIB Chennai
பாரம்பரியத் திட்டம் ஒன்றைத் தத்தெடுத்துக்கொள்ளும் திட்டத்தின் 3-வது பரிசளிப்பு நிகழ்ச்சியை மத்திய சுற்றுலா அமைச்சகம் பண்பாட்டு அமைச்சகம், இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை மற்றும் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் ஆகியவற்றுடன் இணைந்து இன்று புதுதில்லியில் நடத்தியது. 4-வது கட்டத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு நோக்கக் கடிதங்கள் வழங்குவதற்கென இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 4-வது கட்டத்தில் 22 நினைவுச்சின்னங்களுக்கென 9 நிறுவனங்களுக்கு நோக்கக் கடிதங்களை வழங்கிய மத்திய சுற்றுலாத் துறை (தனிப்பொறுப்பு) இணையமைச்சர் திரு. கே.ஜெ. அல்போன்ஸ் இந்திய பாரம்பரியத்தைச் சம்பந்தப்பட்ட அனைவரும் பாதுகாத்து, மேம்படுத்திச் சந்தைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
“பாரம்பரியத்தைத் தத்தெடுங்கள்: உங்கள் பாரம்பரியம், உங்கள் அடையாளங்கள்” என்ற திட்டம் 2017 செப்டம்பர் 27 –ம் தேதி அன்று தொடங்கப்பட்டது. நாடெங்கும் சுற்றுலாவை மேம்படுத்தவும், வளமான பண்பாடு மற்றும் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
இன்றைய தேதி வரை இந்தத் திட்டம் 195 பதிவுகளைத் திட்ட வலைத் தளத்தின் மூலம் பெற்று வெற்றிகரமாக செயல்படுகிறது. இதுவரை 31 நினைவுச் சின்ன நண்பர்கள் தெரிவு செய்யப்பட்டு மேற்பார்வை மற்றும் தொலைநோக்கக் குழுவினரால் பட்டியலிடப்பட்டுள்ளனர். 95 நினைவுச் சின்னங்களிலும். பாரம்பரிய மற்றும் இதர சுற்றுலா இடங்களிலும் சுற்றுலாவுக்கு உகந்த வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்தக் குழு பணியாற்றிவருகிறது.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
(Release ID: 1530066)