வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

தில்லி குடிசைப் பகுதிகளை அவற்றின் இயல்பான சூழலில் மறு மேம்பாடு செய்வதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது: ஹர்தீப் பூரி

प्रविष्टि तिथि: 24 APR 2018 3:53PM by PIB Chennai

அனைவருக்கும் வீடு என்ற தொலை நோக்கை அடைவதற்காகத் தில்லி குடிசைப் பகுதிகளை அவற்றின் இயல்பான சூழலில் மறுமேம்பாடு செய்வதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது என்று மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் ஹர்தீப் பூரி கூறியிருக்கிறார். புதுதில்லியில் இன்று (24.04.2018) காத்புட்லி குடியிருப்பு மறு குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டி அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தில்லி துணைநிலை ஆளுநர் திரு. அனில் பைஜால் பங்கேற்றார். காத்புட்லி குடியிருப்புத் திட்டம் குடிசைப் பகுதி மறு மேம்பாட்டுத் திட்டமாக மட்டுமன்றி அரசுக்கும், குடிசைப்பகுதி மக்களுக்கும் இடையிலான நம்பிக்கையைத் தூண்டுவதாகவும் அமையும் என்று திரு.பூரி கூறினார்.

பொதுத்துறை, தனியார்துறை கூட்டாண்மை மாதிரியில் முதலாவதாக மேற்கொள்ளப்படும் மறுமேம்பாட்டுத் திட்டங்களில் இதுவும் ஒன்று என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.


(रिलीज़ आईडी: 1530061) आगंतुक पटल : 165
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English