குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

பகிர்தல் மற்றும் கவனம் செலுத்துதல் நமது சித்தாந்தத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது : குடியரசுத் துணைத் தலைவர் நமது கலாச்சார மதிப்பின் மையமாக கோயில்கள் திகழ்கின்றன புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயிலைத் திறந்துவைத்தார்

Posted On: 22 APR 2018 5:33PM by PIB Chennai

பகிர்தல் மற்றும் கவனம் செலுத்துதல் ஆகியவை நமது சித்தாந்தத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு கூறியுள்ளார். ஹரே கிருஷ்ணா பவுண்டேஷன் புதுப்பித்துள்ள ஐதராபாத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலை இன்று திறந்துவைத்த பின்னர் கூடியிருந்தவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். நிகழ்ச்சியில் தெலங்கானா வீட்டுவசதி, சட்டம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. ஏ. இந்திரா கரண் ரெட்டி மற்றும் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கோயில்கள் இந்திய கலாச்சார மையமாகவும் பொதுமக்களின் இசை, நாடக மற்றும் ஆன்மிக முன்னேற்றத்திற்கான மையமாகவும் திகழ்வதாகக் குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார். அவை மத மற்றும் ஆன்மிக சிந்தனை குறித்த விழிப்புணர்வை ஹரிகதை மற்றும் புராண சொற்பொழிவுகள் மூலம் ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.  இந்தியாவின் கலாச்சார வாழ்வில் கோவில்களுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் மனித குலத்திற்கு சேவை அளிக்கும் ஒவ்வொரு செயலும் போற்றப்படுகிறது என்றும் குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார். நாம் அன்றாடம் மேற்கொள்ளும் பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆன்மிகத்துடன் தொடர்பு உள்ளது என்றும் அதன் காரணமாகவே வித்யாலயா, சிகிச்சாலயா, போஜனாலயா போன்ற சொற்கள் மற்றும் சவுச்சாலயா என்ற சொல் கூடப் பயன்பாட்டில் உள்ளது எனவும் அவர் கூறினார். அனைத்து வாழும் உயிர்கள் மற்றும் உயிரற்ற பொருட்கள் ஒரே தெய்வீகச் சித்தாந்தத்தின் அம்சமே எனப் பார்ப்பதால் அனைத்து இடங்களிலும் நாம் தெய்வீகத்தைப் பார்க்கிறோம் என்று அவர் கூறினார்.

கிருஷ்ணர் அனைத்து உயர் மதிப்புகளின் சின்னமாகத் திகழ்வதாகக் குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார். சமுதாயத்தில் கிருஷ்ணர் குறித்த எண்ணத்தை ஏற்படுத்தினால், நம்மால் மக்களின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். .மேலும் நம்மால் அமைதி, வளம், சகோதரத்தும் ஆகியவற்றை அனைத்து குடும்பங்களிலும் ஏற்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

 



(Release ID: 1529936) Visitor Counter : 152


Read this release in: English