சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

கடலோர ஒழுங்குமுறை மண்டலத்திற்கான புதிய வரைவை சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 19 APR 2018 5:35PM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2018 என்னும் புதிய வரைவு என்னும் அறிக்கையை வகுத்துள்ளது. இந்த வரைவு அறிவிக்கை அமைச்சகத்தின் வலைதளத்தில் 2018 ஏப்ரல் 18 ஆம் தேதி பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிவிக்கை குறித்த பொதுமக்களின் கருத்துக்கள் 60 நாட்களுக்குள் வரவேற்கப்படுகின்றன.

2011 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை மாற்றியமைக்கப்பட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் மேம்படுத்தப்பட்டு 2018 வரைவு அறிக்கையில் சில தளர்வுகள் மற்றும் திருத்தங்கள் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த திருத்தங்கள் சம்பந்தப்பட்ட கடலோர மண்டல மேலாண்மை திட்டத்தில் செயல்முறைக்கு வரும். 2018 அறிவிக்கைக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி டாக்டர் ஷைலேஷ் நாயக்  தலைமையில் அமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளது. 2011 அறிவிக்கையில் உரிய மாற்றங்களை பரிந்துரைக்க பல்வேறு பிரிவினர் மற்றும் கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பல்வேறு பிரச்சனைகளை இந்தக் குழு ஆய்வு செய்யும். 2018 வரைவு அறிவிக்கையில் முக்கிய அம்சங்கள் மற்றும் 2011 அறிவிக்கையில் மாற்றங்களை அறிய www.pib.nic.in என்ற இணையதளத்தை காணவும்.


(வெளியீட்டு அடையாள எண்: 1529691) வருகையாளர் எண்ணிக்கை : 170
இந்த வெளியீட்டை படிக்க: English