நிதி அமைச்சகம்

இறக்குமதி ஏற்றுமதி சரக்குகளுக்கு அந்நியச் செலாவணி மதிப்பு குறித்த அறிவிக்கை

Posted On: 19 APR 2018 5:00PM by PIB Chennai

இறக்குமதி, ஏற்றுமதி சரக்குகள் மீதான அந்நியச் செலாவணி குறித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

சுங்கச் சட்டத்தின், 1962 (1962ம் ஆண்டின் 2) 14வது பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி மத்திய ஆயத் தீர்வை மற்றும் சுங்கவரித் துறை வாரியத்தின் ஏப்ரல் 5 ஆம் தேதியிட்ட (எண் 31 / 2018- சுங்கம் (N.T.), 2018) அறிவிக்கையாக இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வெளிநாட்டு நாணயங்களை இந்திய நாணயமாக மாற்றும்போதும், இந்திய நாணயங்களை வெளிநாட்டு நாணயங்களாக மாற்றும்போதும் எவ்வளவு மதிப்பு என்பது குறித்தும், இந்த மதிப்பு மாற்றப்படாத வரையில் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2018, ஏப்ரல் 20 ஆம் தேதி முதல்  நடைமுறைக்குவருகிறது.

இந்திய ரூபாய்க்கு இணையான அந்நியச் செலாவணி மதிப்பு, அந்நியச் செலாவணிக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவை குறித்து மேலும் அறிந்துகொள்ள இணையதளம்  www.pib.nic.in காணவும்.

 

 

 

******



(Release ID: 1529689) Visitor Counter : 114


Read this release in: English