சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
திரு.ஜே.பி.நட்டா காயகல்ப விருதுகளை வழங்கினார்
Posted On:
19 APR 2018 4:40PM by PIB Chennai
காயகல்பம் என்பது சிறப்பான பணிக்கான “உரிமையாளர்” என்ற உணர்வை ஏற்படுத்துவதற்கு ஊக்குவிப்பாகத் திகழ்கிறது என்றும், உரிமையாளர் உணர்வு தூய்மைக்கான முனைப்பாக மாறுகிறது என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு. ஜே.பி.நட்டா கூறியிருக்கிறார். ஆரோக்கியம் மற்றும் தூய்மையைப் பரப்பும் பொதுச் சுகாதார வசதிகளில் உயரிய தரத்தைப் பராமரிக்கும் வகையில் பணியாற்றியவர்களுக்குக் காயகல்ப விருதுகளை வழங்கும் தேசியப் பாராட்டு விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.
விருது பெற்றவர்களைப் பாராட்டிய திரு.ஜே.பி.நட்டா, தூய்மைப் பணி என்பது ஏதோ ஒரு நேரத்தில் மட்டும் செய்யும் நடவடிக்கை அல்ல என்றும், அது அன்றாட நடவடிக்கையாக ஒருங்கிணைக்கப்பட்டு வழக்கத்தில் கொள்ளப்படுகிறது என்றும் கூறினார்.
“எனது மருத்துவமனை” என்னும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் சார்ந்த தளத்தில் மருத்துவ வசதிகள் பற்றிய தங்கள் அனுபவத்தை நோயாளிகள் தெரிவிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்று திரு. நட்டா குறிப்பிட்டார். சுமார் ஆயிரம் அரசு மருத்துவமனைகள் இதில் இணைக்கப்பட்டு, சுகாதார வசதிகள், மருத்துவச் சிகிச்சைகள், தூய்மை, மருத்துவமனைப் பராமரிப்பு, ஊழியர்களின் நடத்தை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நோயாளிகள் கருத்துக்களையும், தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் இதில் தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்குச் சுகாதாரத் துறை அமைச்சரும் இணையமைச்சரும் விருதுகளை வழங்கினர்.
(Release ID: 1529664)