சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

விவசாயத்தின் மீதான பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து சார்க் வேளாண் நிபுணர்கள் குழு விவாதித்தது

Posted On: 17 APR 2018 8:35PM by PIB Chennai

மூன்றுநாள் மண்டல மாநாடு ஹைதராபாத்தில் தொடங்கியது

விவசாயத்தின் மீது பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை ஆய்வு செய்யும் நிலவர அறிக்கையை சார்க் நாடுகளைச் சேர்ந்த விவசாய நிபுணர்கள் சமர்ப்பித்துள்ளனர். பருவநிலை மாற்றத்துக்குத் தாக்குபிடிக்கும் நடவடிக்கைகளை அவர்கள் “பருவநிலை மாற்றத்துக்குத் தாக்குபிடிக்கும் வேளாண் கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகள், திட்டங்கள்” என்ற சார்க்கின் மூன்று நாள் மண்டல மாநாட்டில்   விவாதித்தனர். இந்த மண்டல மாநாட்டைத் தெலங்கானா அரசின் தலைமைச் செயலாளர் டாக்டர் ஷைலேந்திர குமார் ஜோஷி தொடங்கிவைத்தார்.  ஹைதராபாதில் (17.04.2018) அன்று இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் தேசிய வேளாண் ஆராய்ச்சி மேலாண்மை நிறுவனத்தில் தொடங்கிய இந்த மாநாட்டில், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை நாடுகளைச் சேர்ந்த 80-க்கும் அதிகமான உயரதிகாரிகள், வேளாண் நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைகள் சார்க் நாடுகளிடையே கூட்டாண்மையை வலுப்படுத்தும். மேலும், பருவநிலை மாற்றத்துக்குத் தாக்குபிடிக்கும் அமைப்புகள், ஆராய்ச்சி, பருவநிலைக்கு ஏற்ற தெற்காசிய வேளாண்மையில் புதுமைக் கொள்கைகள் மற்றும் பொருளாதார நிலைகள் போன்றவற்றையும் வலுப்படுத்தும்.   இந்த மாநாட்டின்போது வேளாண்மை குறித்த ஐநாவின் யூஎன்எஃப்சிசிசி முடிவுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

     மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

-------



(Release ID: 1529607) Visitor Counter : 151


Read this release in: English