பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

சிவில் பணியாளர்கள் தின நிகழ்ச்சியைக் குடியரசுத் தலைவர் தொடங்கிவைக்கிறார் பொது நிர்வாகத்தில் சிறப்புப் பணிக்கான விருதுகளை பிரதமர் வழங்குகிறார்

Posted On: 19 APR 2018 12:04PM by PIB Chennai

மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் நிர்வாகச் சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை 2018 ஏப்ரல் 20, 21 தேதிகளில் புதுதில்லியில் 2 நாள் சிவில் சேவைகள் தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு, நாளை (20.04.2018) நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னுரிமைத் திட்டங்கள் மற்றும் மாவட்டங்கள், அமலாக்கப் பிரிவுகளுக்கான புதுமைப் படைப்பு ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றியமைக்கான பொதுநிர்வாக விருதுகளை இந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை மறுநாள் (21.04.2018)  வழங்குகிறார்.

    சாதாரண குடிமக்களின் நலத்திற்காக மத்திய, மாநில அரசுகளின் மாவட்டங்கள் மற்றும் அமைப்புகள் ஆற்றிய மிகச்சிறப்பான புதுமைப் பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பொதுநிர்வாகத்துக்கான மீச்சிறப்புப் பிரதமர் விருதுகள் நிறுவப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு மத்திய அரசின் கூடுதல் செயலாளர்கள், இணைச்செயலாளர்கள் நிலை அதிகாரிகளுக்கும், இயக்குனர், துணைச் செயலாளர் நிலை அதிகாரிகளுக்கும் எனப் புதிய விருதுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நடைமுறைகள், அமைப்புகள் ஆகியவற்றின் மாற்றத்தை நோக்கிய மேம்பாடுகளை எளிமையாக்குதல், மீண்டும் சீரமைத்தல் போன்றவற்றின் மூலம் உருவாக்கிப், பணியாற்றிய அதிகாரிகளைக் கவுரவிக்கும் வகையில் இந்தப் புதிய விருதுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.    

 

******



(Release ID: 1529599) Visitor Counter : 135


Read this release in: Malayalam , English , Marathi