ரெயில்வே அமைச்சகம்

சத்தீஷ்கருக்கு மாபெரும் ஊக்கம் : மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த பகுதியில் ரயில் பாதையைத் தொடங்கிவைத்தார் பிரதமர் திரு. நரேந்திர மோடி

प्रविष्टि तिथि: 18 APR 2018 6:28PM by PIB Chennai

சத்தீஷ்கர் மாநிலம், வடக்கு பஸ்தார் பகுதியில் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட கங்கெர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதை மற்றும் பயணியர் ரயில் சேவையைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அண்மையில் தொடங்கிவைத்தார். பலோட் மாவட்டத்தில் உள்ள தல்லிராஜ்ஹராவை வடக்கு பஸ்தாரில் உள்ள பானுபிரதாப்பூருடன் இணைக்கும் இந்த ரயில் பாதையை, பீஜப்பூர் மாவட்டம், ஜாங்லா கிராமத்தில் நடைபெற்ற அரசியல் சாசனச் சிற்பி டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கரின் நூற்றாண்டுவிழாவின்போது காணொளிக் காட்சி மூலம் பிரதமர் துவக்கிவைத்தார்.

     இந்த ரயில் பாதை, மக்களிடையே நேரடித் தொடர்புகளை அதிகரிப்பதுடன், ராவ்காட் பகுதியில் உள்ள இரும்புத் தாதுக்களை வெட்டி எடுக்கவும், இப்பகுதியின் மேம்பாட்டிற்கும் பெரிதும் உதவுவதாகவும் இருக்கும்.

     இந்த ரயில் பாதைப் பணிகள் நிறைவுபெறுகையில், சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள தொலைதூர, அடர்ந்த வனப்பகுதிகளை ரயில்வே வரைபடத்துடன் இணைக்கும். உண்மையில் சொல்லவேண்டுமானால், இந்தப் பாதை இப்பகுதி மக்களின் முன்னேற்றத்திற்கான ரயில்வண்டியாக இருக்கும் எனலாம்.


(रिलीज़ आईडी: 1529574) आगंतुक पटल : 168
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English