பாதுகாப்பு அமைச்சகம்
கடல்சார் விமான நடவடிக்கைகள் : ககன் சக்தி-2018
Posted On:
17 APR 2018 6:12PM by PIB Chennai
மேற்கு மற்றும் கிழக்கு பிராந்திய கடல் தளங்களில், இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ககன் சக்தி ஒத்திகையின்போது, இந்திய விமானப்படை தனது கடல்சார் போர்த்திறனை மிகவும் நேர்த்தியாக வெளிப்படுத்தியது. விரிவுபடுத்தப்பட்ட இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும், இந்தியக் கடற்படை ஒத்துழைப்புடன், வானிலேயே எரிபொருள் நிரப்பும் விமானம், சு-30 போர் விமானம் மற்றும் நீண்ட தொலைவு கப்பல் எதிர்ப்பு தளவாடங்களுடன் கூடிய ஜாகுவார் ரக போர் விமானங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஒத்திகையில், இந்திய விமானப்படை தனது வான் ஆதிக்கத்தை உறுதி செய்தது.
மேற்குப் பகுதி கடல் தளங்களில், சு-30 மற்றும் ப்ரம்மோஸ் மற்றும் ஹர்பூன் ரகக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ஜாகுவார் ரகப் போர் விமானங்கள் மூலம் கரையோரம் மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் உள்ள இலக்குகளை தாக்கி சோதனை நடத்தப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in இணையதளத்தைக் காணவும்.
(Release ID: 1529530)