சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

பலதுறை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ராம்பூரில் திரு முக்தார் அப்பாஸ் நக்வி மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார்

प्रविष्टि तिथि: 17 APR 2018 3:49PM by PIB Chennai

மோடி அரசில்அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்என்பது ஒரு முழக்கம் மட்டுமல்ல அதுஅரசுநீதி”, “அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிஎன்பது ராஜதர்மம் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளில் ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினரின் கண்ணியத்தின் ஒரு பகுதியாக வளர்ச்சி என்பது உருவாக்கப்பட்டு அவர்களுக்குச் சாலைகள், மின்சாரம், குடிநீர், வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

பலதுறை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பிலாஸ்பூர், ஸ்வார், சைத்நகர், ஷாபாத், சம்ராவா ஆகிய இடங்களில் உத்தரப்பிரதேச்ச் சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் நல அமைச்சகத்தின் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை ராம்பூர் சிவில் லைன்ஸ் ஆதர்ஷ் ராம்லீலா மைதானத்தில் தொடங்கிவைத்தும் அடிக்கல் நாட்டியும் அமைச்சர் உரையாற்றினார்.

குறுக்கு வழியில் திருப்திப்படுத்தாமல் அதிகாரமளித்தல்”, “கண்ணியத்துடன் வளர்ச்சிஎன்ற கொள்கை காரணமாகச் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடையேயும் நம்பிக்கையும் வளர்ச்சிச் சூழலும் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

                                                          ----
 


(रिलीज़ आईडी: 1529391) आगंतुक पटल : 111
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी