நித்தி ஆயோக்

அட்டல் டிங்கரிங் சோதனைக் கூடங்கள் (ஏ டி எல் எஸ்) வருடாந்தரச் சமூக தினத்தைக் கொண்டாடுகிறது.

Posted On: 17 APR 2018 3:29PM by PIB Chennai

புதிய கண்டுபிடிப்புகளுக்கு இடமளிப்பதை நோக்கமாகக் கொண்டு சிறார்கள் ஒவ்வொருவரும் எளிதில் பயன்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் ஒவ்வொரு பள்ளியிலும் நித்தி ஆயோகின் அட்டல்   புதிய கண்டுபிடிப்பு இயக்கத்தின் கீழ் அட்டல் டிங்கரிங் சோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நான்காவது தொழில் புரட்சி யுகத்தில் முக்கியமான திறமைகளை உருவாக்குவதற்கும் மாற்றியளிப்பதற்கும் உதவியாக நவீனத் தொழில் நுட்பங்களைக் கொண்டுள்ள ஏடிஎல்எஸ் சிறார்களிடம் அறிவியல் ஆர்வத்தையும் தொழில்முனையும் உணர்வையும் மேம்படுத்தும் அமைப்புகளாகத் தற்போது உள்ளன.

ஏடிஎல் சமூக தினம் என்பது இந்தச் சோதனைக் கூடங்களுக்குப் பக்கத்தில் உள்ள மக்களை வரவழைத்து  வியப்பளிக்கும் புதிய அறிவியல் உலகம் மற்றும் எதிர்க்காலத் தொழில்நுட்பங்கள் குறித்தும் அவர்களிடம் விழிப்புணர்வைப் பரவச்செய்யும் முயற்சியாகும். ஏப்ரல் 14 அன்று கொண்டாடப்பட்ட அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை மையமாகக் கொண்டு ஏப்ரல் 13-16 தேதிகளில் இந்தியா முழுவதும் வருடாந்தரச் சமூக தினம்  கொண்டாடப்படுகிறது. அட்டல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம் அட்டல் டிங்கரிங் சோதனைக் கூடங்களை நிறுவ 2017-இல் 2,400 க்கும் அதிகமான பள்ளிகளைத் தெரிவு செய்திருந்தது.

அட்டல் டிங்கரிங் சோதனைக் கூடங்களுக்குச் சமூக தினம் கொண்டாடப்பட்டபோது 30,000 வரையிலான புதிய மாணவர்கள் அடையாளம் காணப்பட்டதோடு, அதன் படைப்பாக்கம் மற்றும் புதிய கண்டுபிடிப்புச் சூழலை உருவாக்கும் தன்மை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும்  மேலும் கூடுதலாக இதுபோன்ற இளைய மாணவக் கண்டுபிடிப்பாளர்களை ஏடிஎல்எஸ் உருவாக்கும் ஏடிஎல் சமூக தினம் போன்ற முன்முயற்சிகள் தாக்கத்தை விரிவாக்குவது மட்டுமன்றி சமூக அளவில் மாற்றத்திற்கான முயற்சிக்கு வளங்களாகவும் விளங்கும்.



(Release ID: 1529371) Visitor Counter : 143


Read this release in: English