குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

பண்ணைத்துறையை நீடிக்க வல்லதாகவும் லாபகரமானதாகவும் மாற்றுவதற்கு புதிய கண்டுபிடிப்பு நடைமுறைகள் அத்துறைக்கு வரவேண்டும்: குடியரசுத் துணைத் தலைவர்.

Posted On: 17 APR 2018 1:43PM by PIB Chennai

பண்ணைத்துறையை நீடிக்க வல்லதாகவும் லாபகரமானதாகவும் மாற்றுவதற்கு புதிய கண்டுபிடிப்பு நடைமுறைகள் அத்துறைக்கு வரவேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார். அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹட்டில் உள்ள அஸ்ஸாம் வேளாண் பல்கலைக்கழகத்தின் ஓராண்டுகாலப் பொன்விழா கொண்டாட்டங்களைத் தொடங்கிவைத்து அவர் உரையாற்றினார். அஸ்ஸாம் மாநில ஆளுநர் திரு ஜகதீஷ் முக்கி, வேளாண் அமைச்சர் திரு அதுல் போரா மற்றும் பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றில் தற்சார்பு நிலை எட்டுவது நாட்டுக்குச் சவாலாக உள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார்.  நமது விவசாயிகள் காட்டுகின்ற அர்ப்பணிப்பாலும் நமது சோதனைக் கூடங்களில் நடத்தப்படுகின்ற ஆராய்ச்சிகளாலும் இந்த இரண்டு பயிர் வகைகளிலும் விரைவில் தற்சார்பை எட்டுவோம் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

நீடித்த உணவுப் பாதுகாப்புக்காகப் பண்ணைத்துறையில் மாறிவரும் தேவைகளுக்குத் திட்டவட்டமான செயல்பாடு இந்தியாவுக்கு அவசியம் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். பருவநிலை மாற்றம், குறைந்து வரும் மண்வளம், குறைந்து வரும் நீராதாரங்கள்,  அழிந்துவரும் பல்லுயிர்ப் பெருக்கம் போன்ற சமகால எதார்த்தங்கள் பண்ணைத்துறையைப் பாதிக்கின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார். விவசாயத் தொழிலில் பொருளாதாரப் பயன் குறைவானது அதிகரித்து வருவதன் காரணமாக அது ஈர்ப்புடையதாக இல்லை என்றும் அவர் கூறினார்.

ஏற்ககெனவே இருந்ததைவிடக் குறைவான நபர்களே தற்போது வேளாண்துறையை விரும்புகிறார்கள் என்று குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார். புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு வழக்கமான சிந்தனைகளிலிருந்தும் அமைப்புகளிலிருந்தும் விடுபடும் நபர்களும், மிகவும் அதிகமான திறமையும் ஊக்கமும் உள்ள மனித வளங்களும் நமக்குத் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

உற்பத்தி அதிகரிப்பது மட்டும் விவசாயத்துறையில் மக்களை ஊக்கப்படுத்த இயலாது என்பதால் அவர்கள் கோழி வளர்ப்பு, பால் உற்பத்தி, மீன் வளர்ப்பு போன்ற மாறுபட்ட தொழில்களிலும் ஈடுபட விஞ்ஞானிகளும், அரசுகளும் ஊக்கப்படுத்த வேண்டுமென்று குடியரசுத் துணைத் தலைவர் கேட்டுக்கொண்டார். வடகிழக்குப் பிராந்தியம் முழுவதும் பால் மற்றும் இறைச்சிப் பொருள்களின் தேவை மிக அதிகமாக உள்ளது என்றும் இந்தச் சவாலை நல்லதொரு வாய்ப்பாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். நிலங்களில் கடுமையாகப் பாடுபடும் விவசாயிகளுக்கு அறிவுப்பூர்வமாகவும் நிதி சார்ந்தும் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் காப்பீட்டு வசதிகளை வழங்கியும் அதிகாரமளிக்க வேண்டுமென்றும் வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி குறித்து மறு சிந்தனையும் புதிய ஊக்குவிப்பும் தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தைக் காணவும்.  



(Release ID: 1529362) Visitor Counter : 116


Read this release in: English , Hindi