பாதுகாப்பு அமைச்சகம்

என் சி சி தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் பி பி மல்ஹோத்ரா பொறுப்பேற்றார்.

இடுகை இடப்பட்ட நாள்: 17 APR 2018 1:12PM by PIB Chennai

உலகின் மிகப்பெரிய சீருடை அணிந்த இளைஞர் அமைப்பான தேசிய மாணவர் படையின் தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் பி பி மல்ஹோத்ரா 11-04-2018 அன்று பொறுப்பேற்றார்.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001T2ZF.jpg

 

பல்வேறு படைப் பிரிவுகள், தலைமை பதவிகள் உள்ளிட்ட பணி முறைகளில் லெப்டினன்ட் ஜெனரல் மல்ஹோத்ரா சிறந்து விளங்கியவர். தற்போதைய பணி நியமனத்திற்கு முன்னர் ராணுவத்தின் வடக்குப் பிரிவு தலைமைப் பொறியாளராக இவர் இருந்தார்

புனேயில் உள்ள தேசியப் பாதுகாப்புக் கல்விக் கழகத்தின் முன்னாள் மாணவரான ஜெனரல், 1983 ஜூன் 18 அன்று இந்திய ராணுவத்தின் பொறியாளர்கள் படைப் பிரிவில் சேர்ந்தார். வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் பணிகளுக்கான ஊழியர் கல்லுரியில் பட்டம் பெற்ற ஜெனரல், புதுதில்லியில் உள்ள மதிப்புக்குரிய தேசியப் பாதுகாப்புக் கல்லூரி பாடமுறையிலும் பயின்றவர். புனேயில் உள்ள ராணுவப் பொறியாளர் கல்லுரியில் பி.டெக், போவாயில் உள்ள ஐஐடி யில் எம்.டெக்   இந்துரில் உள்ள டிஏவிவி-இல் எம்.ஃபில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில் உள்ளிட்டவை அவரது கல்வித் தகுதிகளாகும்.


(வெளியீட்டு அடையாள எண்: 1529331) வருகையாளர் எண்ணிக்கை : 114
இந்த வெளியீட்டை படிக்க: English