ஊரக வளர்ச்சி அமைச்சகம்

பிரதமர் கிராமச் சாலைகள் திட்டம் மார்ச் 2019 இலக்கை எட்டும் வகையில் பீடுநடை

Posted On: 16 APR 2018 7:42PM by PIB Chennai

எந்த வளர்ச்சி்த் தி்ட்டத்திற்கும் சாலைகள் மிகவும் அவசியமானவை ஆகும். பிரதமர் கிராமச் சாலைகள் திட்டம் 2000ஆவது ஆண்டில் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து 1,52,124 குடியிருப்புகளுக்குச் சாலைஇணைப்புகளை (நிர்ணயிக்கப்பட்ட 1,78,184 குடியிருப்புகளில் 85.37 சதவீதம்) வழங்கியுள்ளது. தேசிய வளர்ச்சிக்குக் கிராமப்புறச் சாலைகள் மிகவும் அத்தியாவசியமானவையும் அவசரத் தேவையானவையும் என்பதை உணர்ந்திருப்பதால், பிரதமர் கிராமச் சாலைகள் திட்டம்-1இன் நிறைவு இலக்கான 2022-ஆம் ஆண்டிலிருந்து 2019-ஆம் ஆண்டாக முன்கூட்டியே மாற்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டும்வகையில், பணிகளைத் துரிதப்படுத்த 1,78,184 தகுதி வாய்ந்த குடியிருப்புகளின் இலக்கில் 1,66,012 குடியிருப்புகளுக்கு (93%) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் கிராமச் சாலைகள் திட்டத்தின்கீழ் அனைத்துப் பருவநிலைகளுக்கும் ஏற்றவகையிலான மூலப்பொருட்களைக் கொண்டு அமைக்கப்படும்  இந்தச் சாலைகள், 2017-18ஆம் ஆண்டில் முதல்முறையாக 11,499 கிராமங்களுக்குப் புதிய இணைப்புச் சாலைகளாக வழங்கப்பட்டுள்ளன.

     தகுதிவாய்ந்த குடியிருப்புகளாக நிர்ணயிக்கப்பட்டவற்றில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான குடியிருப்புகளுக்குப் பிரதமர் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் புதிய இணைப்புகள் வழங்கப்பட வேண்டியுள்ளது.  எஞ்சிய 6 சதவீதக் குடியிருப்புகள் சாலைகள் அமைக்க சாத்தியக்கூறுகள் அற்றவையாகவோ மாநில அரசுகள் தங்கள் சொந்த நிதிஆதாரத்திலிருந்து அனுமதிக்கப்பட்டதாகவோ உள்ளன.   1,52,124 குடியிருப்புகளுக்கு இதுவரை இணைப்புச் சாலைகள் (மாநில அரசுகளால் இணைக்கப்பட்ட 16,380 குடியிருப்புகள் உள்பட) வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக 100 முதல் 249 மக்கள்தொகை கொண்ட 2,109 குடியிருப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின்கீழ் 5,50,533 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

  

ஆண்டு

அமைக்கப்பட்ட தூரம்

தினசரி அமைக்கப்படும் விகிதம் (கி.மீ)

2011-12

30994.50

85

2012-13

24161.29

66

2013-14

25316.40

69

2014-15

36336.81

100

2015-16

36449.36

100

2016-17

47447.00

130

2017-18

48750.66

134

2018-19ஆம் நிதியாண்டுக்கான பிரதமர் கிராமச்சாலைகள் திட்டத்தின் முக்கிய முன்னுரிமைகள்:

     பிரதமர் கிராமச் சாலைகள் திட்டம் 1-இன் கீழ் அனைத்துத் தகுதியான குடியிருப்புகளும் 2019-ஆம் ஆண்டு மார்ச்சுக்குள் முடிக்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் 2018-19ஆம் நிதியாண்டில் 19,725 கிராமங்களுக்கு 61,000  கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலைகள் இணைப்பை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதேபோல, 12,000 கிலோமீட்டர் தூரத்திற்குப் பசுமைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சாலைகளை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  2018-19ஆம் நிதியாண்டில், தேசியத் தரக் கண்காணிப்பாளர்களால் 8,670 சோதனைகள் மாநிலத் தரக் கண்காணிப்பாளர்களால் 35,630 சோதனைகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

     கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

----



(Release ID: 1529296) Visitor Counter : 164


Read this release in: English