சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

கிழக்குப் புறப்பரப்பு விரைவுச் சாலை: பிரதமர் ஏப்ரல் 29-இல் திறந்து வைக்கிறார்

Posted On: 16 APR 2018 8:58PM by PIB Chennai

தில்லிக்கும் மும்பைக்கும் இடையிலான நெடுஞ்சாலையில் சீரமைப்பு, புதிதாக மேம்படுத்தப்படும்என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து, நீர்வளம், நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை புதுப்பிப்புத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அறிவித்தார்.

இந்த விரைவுவழி நெடுஞ்சாலைப் பணிக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், “தில்லி - மும்பை இடையிலான விரைவுவழிச் சாலையை இணைக்கும் சம்பல் விரைவுவழிச் சாலை அமைக்கப்படுவதன் மூலம் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பயனடையும். இதன் மூலம் அப்பகுதிகளில் உள்ள பின்தங்கிய பகுதிகள் குருகாம்  போல முன்னேற்றம் அடையும்என்றும் அவர் தகவல் வெளியிட்டார்.

தில்லியைச் சுற்றிய கிழக்கு, மேற்கு புறப்பரப்பு விரைவுவழி நெடுஞ்சாலைகள் அமைக்கும் லட்சியப்பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதில் கிழக்குப் புறப்பரப்பு விரைவுவழிச் சாலையைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இம்மாதம் 29-ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்துவைக்கிறார். அதைப் போல், கிழக்கு தில்லியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு தில்லிமீரட் விரைவுவழிச் சாலை குறித்துத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் தில்லிதஸ்னா பிரிவையும் பிரதமர் அதே தினம் திறந்துவைக்கிறார்என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in இணையதளத்தைக் காணவும்.

 

 

********



(Release ID: 1529295) Visitor Counter : 151


Read this release in: English