ஜவுளித்துறை அமைச்சகம்

கைவினைத் துறையில் திறன் மேம்பாடு அவசியம் என்று ஜவுளித்துறை அமைச்சர் வலியுறுத்தினார்

Posted On: 16 APR 2018 4:00PM by PIB Chennai

கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியக் கண்காட்சி மையம் மற்றும் விற்பனைக் கூடத்தில் ஏழாவது இந்திய உள்நாட்டுக் கண்காட்சி 2018-ஐ மத்திய ஜவுளி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி ஸூபின் இரானி, இன்று (16.04.2018) தொடங்கிவைத்தார்.

இந்தியக் கண்காட்சி மையம் மற்றும் விற்பனைக்கூடத்தில் மரபுசார்ந்த கல்விக்கழகம், வர்த்தகக் கண்காட்சி, தொழில் ஆராய்ச்சி மற்றும் நிர்வாகப் பிரிவையும் அமைச்சர் பார்வையிட்டார். வர்த்தகக் கண்காட்சி மற்றும் மரபுசார் நிகழ்வுகளுக்கான தொழில்முறைக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தியாவின் முதலாவது கல்விக் கழகம் இதுவாகும்.

கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள மூன்று நாள் கண்காட்சியில், வடகிழக்குப்  பிராந்தியத்தின்மீது சிறப்புக்கவனம் செலுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள தயாரிப்பு மையங்களிலிருந்து பல துறை சார்ந்த கண்காட்சியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 700 பேர் பங்கேற்றனர்.
 

==========



(Release ID: 1529244) Visitor Counter : 126


Read this release in: English , Hindi