பாதுகாப்பு அமைச்சகம்

ககன்சக்தி 2018 பயிற்சி: பெரும் பாதிப்புகளில் மீட்பு பணி

Posted On: 14 APR 2018 7:19PM by PIB Chennai

இந்திய விமானப் படையின் ‘ககன்சக்தி 2018’ பெரும் பயிற்சியின் ஒரு பகுதியாக மாபெரும் விமான மீட்புப் பயிற்சி வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டது. இதில் சி-17 மூலம் 88 பேர் லே பகுதியில் இருந்து சண்டீகருக்கு விமான மார்க்கமாக அழைத்துச் செல்லப்பட்டனர். சி-17 குளோப் மாஸ்டர் விமானத்தில் ஸ்ட்ரெச்சர்களுக்கான ஆதரவுக் கட்டமைப்புகள் பிரதான கேபினில் பொருத்தப்பட்டன. இந்தப் பயிற்சியின்போது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நோயாளிப் பரிமாற்றப் பிரிவு ஒன்றின் மூலம் நோயாளிகளுக்கு விமானத்திலேயே தீவிரச் சிகிச்சை இந்தப் பயிற்சியின் போது அளிக்கப்பட்டது.

சண்டிகரில் தரையிறங்கிய பின்னர் நோயாளிகள் சண்டிமந்திரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். நோயாளிகளை விரைவாக ஆம்புலன்சில் கொண்டுசெல்ல வசதியாக சிவில் அதிகாரிகளுடன் இணைந்து பசுமைவழித்தடம் ஒன்று அமைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதில் தனது விரைவான செயல்திறனை இந்தப் பயிற்சியின் மூலம் இந்திய விமானப் படை நிரூபித்துள்ளது. இந்திய விமானப் படையின் இந்த்த் திறன் மனிதஉதவி மற்றும் பேரிடர் நிவாரணச் செயல்பாடுகளின்போதும், நெடுஞ்சாலைகளில் தரையிறங்கிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதிலும் பயன்படுத்திக் கொள்ளப்படும்.


(Release ID: 1529212)
Read this release in: English